இந்தியாவில் 422 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு- மகாராஷ்டிராவில் 108 கேஸ்கள் பதிவு
டெல்லி: இந்தியாவில் 17 மாநிலங்களில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 108 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 6,987 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாளை ஒப்பிடுகையில் இது 2.9% குறைவு. இதையடுத்து நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,47,86,802 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் அதிகம்
கேரளாவில்தான் அதிகபட்சமாக 2,407 பேருக்கு கொரோனா பாதிப்பு புதியதாக கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 1485; தமிழகத்தில் 606; மேற்கு வங்கத்தில் 552, கர்நாடகாவில் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த 5 மாநிலங்களில் நாட்டின் ஒருநாள் கொரோனா பாதிப்பு 76.13%. கேரளா மாநிலத்தில் மட்டும் 34.45% புதிய கேஸ்கள் பதிவாகி உள்ளன.

கொரோனா மரணங்கள்
கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 162 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மொத்த கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 4,79,682. கேரளாவில்தான் மிக அதிகபட்சமாக 115 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 12 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 7,091 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நாட்டில் இதுவரை 3,42,30,354 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

422 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு
இந்தியாவில் 17 மாநிலங்களில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில்தான் மிக அதிகபட்சமாக 108 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்ததாக டெல்லியில் 79 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 3-வது இடத்தில் குஜராத் மாநிலத்தில் 43 பேருக்கும் தெலுங்கானாவில் 41 பேருக்கும் கேரளாவில் 38 பேருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34.
Recommended Video

மாநிலங்களில் பாதிப்பு விவரம்
பிற மாநிலங்களின் ஓமிக்ரான் பாதிப்பு விவரம்: கர்நாடகா 31; ராஜஸ்தான் 22; மேற்கு வங்கம்- 6; ஹரியானா-4; ஒடிஷா-4; ஆந்திரா-4; ஜம்மு காஷ்மீர்-3; உத்தரப்பிரதேசம்-2; சண்டிகர்-1; லடாக்-1 உத்தரகாண்ட்-1. ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 130 பேர் குணமடைந்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications