நவம்பர் 24-க்கு முன்னரே 20 நாடுகளில் பரவியதா ஓமிக்ரான்?.. நெதர்லாந்து சுகாதாரத் துறை சொல்வது என்ன?
டெல்லி: ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்டின் பரவல் வெளியுலகிற்கு தெரிவதற்கு முன்னர் 20 நாடுகளில் இந்த வேரியண்ட் பரவியதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட பி.1.1.529 என்ற ஓமிக்ரான் வேரியண்ட் பரவி வருகிறது. தற்போது வரை 17 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளதாக தெரிகிறது. இது மிகவும் கவலைத் தர கூடிய பிரச்சினை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓமிக்ரான் வைரஸ் விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் ஆற்றல் கொண்டது. இது தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது என சொல்லப்படுகிறது. ஆனால் சில விஞ்ஞானிகள், தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என சொல்கிறார்கள்.
கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் உடல் சோர்வு, தசை வலி, தொண்டை கரகரப்பு, வறட்டு இருமல், லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படுகின்றன.
இந்த வைரஸ் இந்தியாவில் இதுவரை இல்லை என மத்திய அமைச்சகம் ஆறுதலான செய்தியை கூறியுள்ளது. எனினும் வெளிநாட்டுப் பயணிகள் மூலம் ஊடுருவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்த வைரஸ் குறித்து வெளியே தெரிவதற்கு முன்னர் 20 நாடுகளில் பரவியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நெதர்லாந்து நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில் நவம்பர் 24ஆம் தேதிதான் ஓமிக்ரான் பரவல் குறித்து அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக நவம்பர் 19, 23 ஆகிய தேதிகளில், சாம்பிள்கள் எடுக்கப்பட்ட போது அதில் புதிய வேரியண்ட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Recommended Video
இருவருக்கு பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நவம்பர் 24 ஆம் தேதிக்கு முன்னரே ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸ் பரவியது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் அமெரிக்காவுக்கு வரும் விமான பயணிகளை தீவிரமாக கண்காணிக்குமாறு அதிபர் ஜோ பிடன் அறிவுறுத்தியுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications