"எடுத்தேன் பாரு ஓட்டத்தை!" போலீஸை பார்த்ததும் தெறித்து ஓடிய காங். இளைஞரணி தலைவர்? நடந்தது என்ன
டெல்லி: தலைநகரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் சமயத்தில் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் ஒருவரின் செயல் ட்விட்டரில் வைரலாகி உள்ளது.
நாட்டின் விடுதலை போராட்டங்கள் நடைபெற்ற சமயத்தில் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இந்நிறுவனம் நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை வெளியிட்டு வந்தது
நஷ்டத்தில் இயங்கிய இந்த நிறுவனத்துக்குக் காங்கிரஸ் கட்சி ரூ. 90 கோடி கடன் கொடுத்தது. இருப்பினும், நஷ்டம் தொடர்ந்ததால் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது.

நேஷனல் ஹெரால்டு
இதையடுத்து 2010இல் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. யங் இந்தியா நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா காந்தி, ராகுல் காந்தி வசம் இருந்ததால் இது சர்ச்சையானது. இந்த பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி பாஜக எம்.பி. சுப்பிரமணியசுவாமி வழக்கு தொடர்ந்தார். மேலும், இதில் அமலாக்கத் துறையும் அன்னிய செலாவணி வழக்கு தொடர்ந்தது.

விசாரணை
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. சோனியா காந்தி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் ஆஜராகவில்லை. ராகுல் காந்தி மட்டும் நேற்றைய தினம் ஆஜரானார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்தியது.

போராட்டம்
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் கை உடைந்ததாகவும் அக்கட்சியினர் தெரிவித்தனர். இந்தச் சூழலில் நேற்றைய தினம் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் போலீசாரை பார்த்ததும் தெறித்து ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பாஜக ஆதரவாளர்கள் நக்கல் செய்து வருகின்றனர்.

வைரல்
அந்த வீடியோவில் காரில் இருந்து இறங்கிய காங்கிரஸ் இளைஞரணி தலைவர் பி.வி.ஸ்ரீனிவாசை போலீஸ் அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்துகிறார். அப்போது அவரிடம் இருந்து பி.வி.ஸ்ரீனிவாஸ் தப்பிச் செல்வது பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை தான் பாஜக ஆதரவாளர்கள் இணையத்தில் வைத்துச் செய்து வருகின்றனர்.
|
பாஜக
இது குறித்து ஐடி அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கஞ்சன் குப்தா தனது ட்விட்டரில், "சத்யாகிரகிகளை போலீசார் ஒடுக்கியபோது, காவலர்களிடம் இருந்து யார் ஓடினார் என்று வரலாறு சொல்லும்" என்று ட்வீட் செய்துள்ளார். அதேபோல மற்றொரு ட்வீட்டில் டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் அஜய் செஹ்ராவத், காங்கிரஸ் தலைவர் போலீஸுக்கு பயப்பட வேண்டாம் என்று கூறும் நிலையில், இவர் என்ன செய்கிறார் என பாருங்கள் என்று நக்கலடிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்..
|
மற்றொரு வீடியோ
மேலும் சில பாஜகவினர், ராகுல் காந்தி வீர் சர்வகர் போல இல்லை என்று கூறுகிறார். ஆனால், இவர் என்ன செய்கிறார் என்ற ரீதியில் ட்வீட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவை பாஜக ஆதரவாளர்கள் கிண்டல் செய்து வரும் நிலையில், உண்மையில் என்ன நடந்தது என்பதை விளக்கும் வகையில் சீனீவாஸ் மற்றொரு வீடியோவை பகிர்நதுள்ளார். அதில் போலீசாரிடம் இருந்து தப்பும் அவர் போராட்ட களத்திற்கு வருவது போல உள்ளது.

கிண்டல்
அதாவது போராட்ட களத்திற்கு வருவதற்காகவே அவர் போலீசாரிடம் இருந்து தப்பியதாக தெரிவித்தார். அவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் செல்வதும் பதிவாகி உள்ளது. இருப்பினும், இதனை பாஜக ஆதரவாளர்கள் ஏற்காமல் கிண்டல் செய்து வருகின்றனர்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications