திடீர் பரபரப்பு.. புது நாடாளுமன்றம் திறக்கும் நாளில் குலுங்கிய தலைநகர் டெல்லி.. லேசான நிலநடுக்கம்
டெல்லி: இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், இன்று டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்தியாவில் மக்களவை மற்றும் மாநிலங்களவையைக் கொண்ட நாடாளுமன்றம் டெல்லியில் இருக்கிறது. இத்தனை காலம் நாடாளுமன்றமாகச் செயல்பட்டு வந்த கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.

நமது நாட்டின் பழைய நாடாளுமன்ற கட்டிடம் பல புகழ்பெற்ற விவாதங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டங்களைப் பார்த்துள்ளது. இருப்பினும், அங்கே போதிய இடவசதி இல்லை, தொழில்நுட்பம் இல்லை எனப் பல புகார்கள் இருந்தன.
நாடாளுமன்ற கட்டிடம்: இதையடுத்து மத்திய அரசு அங்கே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்தது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை இடிக்காமல் சென்டிரல் விஸ்டா திட்டத்தின் கீழ் அதற்கு அருகிலேயே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்டினர். கடந்த 2019இல் பிரதமர் மோடி இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். கொரோனா காலத்திலும் இதற்கு மட்டும் சிறப்பு அனுமதி வாங்கி கட்டிட பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது.
இதன் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இன்று பிரதமர் மோடி இதை நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமர் மோடிக்குப் பதிலாகக் குடியரசுத் தலைவர் இந்தக் கட்டிடத்தைத் திறப்பதே சரி என்று கூறி பல எதிர்க்கட்சிகள் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்தது தனிக்கதை. சுமார் 60,000 தொழிலாளர்கள் கடுமையாக உழைத்து இந்த புதிய கட்டிடம் இப்போது தயாராக உள்ளது.
நிலநடுக்கம்: பழைய கட்டிடம் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் இல்லை என்பதும் புது நாடாளுமன்ற கட்டிடம் கட்ட முக்கிய காரணமாக இருக்கிறது. ஏனென்றால் டெல்லி நிலநடுக்க மண்டலத்தில் 4ஆம் மண்டலத்தில் இருக்கிறது. அதாவது அங்கே ஓரளவுக்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்தச் சூழலில் நிலநடுக்கத்தைத் தாங்க முடியாத வகையில் உள்ள கட்டிடத்தில் நாடாளுமன்றம் செயல்படுவது ஆபத்தானது என்றே பல வல்லுநர்கள் முன்வைத்த வாதமாக இருந்தது.
இந்தச் சூழலில் தான் பிரதமர் நரேந்திர மோடி புது நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைத்தார். இன்று நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்ட அதே நாளில் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் பெரியளவில் காயங்கள் அல்லது சேதங்கள் ஏற்பட்டதாக இப்போது வரை தெரியவில்லை.
டெல்லி நடுக்கம்: சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம், காலை 11.23 மணியளவில் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். டெல்லி மட்டுமின்றி, சண்டிகர் உட்படப் பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் அருகே 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் இருந்து 79 கிமீ தென்கிழக்கே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக கூறப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 11:19 மணிக்கு 220 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது புதிய நாடாளுமன்ற கட்டிடம் எந்தளவுக்கு அவசியம் என்பதையே உணர்த்துவதாக உள்ளதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications