இனி ஒரு சிகரெட் ரூ.72? 2026ல் விலையே ஏற்ற மத்திய அரசு முடிவு.. புகைப்பழக்கத்தை கைவிட சூப்பர் சான்ஸ்
டெல்லி: மத்திய நிதி அமைச்சகம் சார்பில் புகையிலை பொருட்கள் மீதான கலால் வரி திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் சிகரெட் உள்பட பிற புகையிலை பொருட்களின் விலைகள் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட உள்ளது. இந்த மசோதாவின்படி ஒரு சிகரெட்டின் விலை ரூ.18 ல் இருந்து ரூ.72 ஆக அதிகரிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 2026 குடியரசு தினத்துக்கு முன்பாக இதனை கொண்டு வர மத்திய அரசு பணி செய்து வருவதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

நம் நாட்டில் பலருக்கும் புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. குறிப்பாக ஏராளமானவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமயைாகி உள்ளனர். கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் சிகரெட் புகைக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர்.
புகைப்பிடிப்பது உள்பட எந்த வகையான புகைப்பழக்கத்தை பயன்படுத்தினாலும் அது உடல்நலத்துக்கு கேடு தான்.ஆனாலும் கூட பலரும் அதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் சிகரெட் உள்பட அனைத்து புகையிலை பொருட்களின் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. சமீபத்தில் முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு மத்திய கலால் (திருத்த) மசோதா 2025,யை கொண்டு வந்தது. மத்திய நிதித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு சபைகளான லோக்சபா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
முதலில் லோக்சபாவிலும், 2வது ராஜ்யசபாவிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின் நோக்கம் என்பது புகையிலை பொருட்கள் மீதான வரியை உயர்த்துவது தான்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் புகையிலை பொருட்கள் மீது 40 சதவீத அளவுக்கு மட்டுமே வரி விதிக்கப்படும். அதைவிட கூடுதல் வரி விதிப்பதற்காக, ஜிஎஸ்டி வரி முறைகளில் இருந்து புகையிலை பொருட்கள் நீக்குவதற்கும் இந்த மசோதா இடமளிக்கிறது.
அதன்படி சிகரெட்டுகள், சுருட்டுகள், ஹுக்கா புகையிலை, மெல்லும் புகையிலை, ஜர்தா மற்றும் வாசனைப் புகையிலை உள்ளிட்ட புகையிலை தயாரிப்புகள் மீதான கலால் வரிகள் மற்றும் வரிகளை திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொதுவாக வரி உயரும்போது சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.
அந்த வகையில் மெல்லும் புகையிலையின் வரி 25 சதவீத்தில் இருந்து 100% ஆக உயரும். ஹுக்கா புகையிலையின் வரி 25 சதவீதத்தில் இருந்து 40% ஆகவும், குழாய் மற்றும் சிகரெட்டுகளுக்கான புகையிலை கலவைகளின் வரி 60 சதவீத்தில் இருந்து 325% ஆகவும் உயரும். தற்போதைய மத்திய கலால் சட்டம் 1944-இன் கீழ், சிகரெட்டுகள் அவற்றின் நீளம் மற்றும் வகையை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகிறது.
தற்போது குறைந்தபட்சமாக 1,000 சிகரெட்டுகளுக்கு ரூ.200 முதல் ரூ.735 வரை வரி விதிக்கப்படுகிறது. ஆனால், புதிய சட்டத் திருத்தம் மிகக் கடுமையான விலையேற்றத்தை முன்நிறுத்துகிறது. அதன்படி 1,000 சிகரெட்டுகளுக்கான வரிகள் ரூ.2,700 முதல் ரூ.11,000 ஆக அதிகரிக்கும்.
இதனால் தற்போது ரூ.18 க்கு விற்பனையாகும் ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 வரை அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் ரூ.10 மற்றும் அதற்கு குறைவான விலையில் விற்பனையாகும் சிகரெட்டின் விலையும் கணிசமாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது இந்த மசோதா இருசபைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் விரைவில் சட்டமாக்கப்பட உள்ளது. அதன்பிறகு இந்த விலை யர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இதற்கிடையே தான் 2026 ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்துக்கு முன்பாக சிகரெட் உள்பட பிற புகையிலை பொருட்களின் விலை உயர்வை அமலுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு பணி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவை பலரும் வரவேற்றுள்ளனர். குறிப்பாக சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளவர்களில் ஒருதரப்பினர் பாராட்டி உள்ளனர். சிகரெட் புகைக்கும் பழக்கத்தை விடமுடியாமல் தவித்து வருவதாகவும், இந்த விலையேற்றம் சிகரெட் பழக்கத்தை கைவிட உதவும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளையில் இன்னொரு தரப்பினரோ, சிகரெட் விலை உயரும்போது இ- சிகரெட்டுக்கு பலரும் மாறலாம். இந்த சிகரெட்டுக்கு நம் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் விலை உயர்வால் இ-சிகரெட் விற்பனை சட்டவிரோதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என கவலை தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications