கூடுதலாக ரூ.13,981 கோடி செலவாகும்.. ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு திமுகவின் டிஆர் பாலு கடும் எதிர்ப்பு
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.13,981 கோடி செலவாகும். அவையில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் எப்படி மசோதா கொண்டு வர முடியும்? என்று டிஆர் பாலு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
நம் நாட்டில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் என்பது வெவ்வேறு ஆண்டுகளில் நடந்து வருகிறது. இதனை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக நடத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்நிலையில் தான் லோக்சபாவில் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை கொண்டு வருவதற்கான மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் மேக்வால் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதன்படி காங்கரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, திமுக உள்பட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்ப்புக்கு நடுவே இந்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி மசோதா மீது எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினர். திமுக சார்பில் மூத்த தலைவர் டிஆர் பாலு பேசினார். அப்போது அவர் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக டிஆர் பாலு பேசியதாவது:
''தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதுபோல ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கூட்டாட்சிக்கு எதிரானது. ஜனநாயகத்தை அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இம்மசோதாவை நாங்கள் ஆதரிக்க முடியாது. மத்திய பாஜக அரசிற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் இந்த மசோதாவை எப்படி சட்டமாக்க முடியும்? இப்படியான மசோதாவை எப்படி கொண்டு வர முடியும்?
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.13,981 கோடி செலவாகும். ரூ.9284 கோடி ரூபாய் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்க மட்டுமே செலவு செய்ய வேண்டும். இது தேவையில்லாதது. சட்ட மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பி விவாதம் நடத்த வேண்டும்.. ஒரு அரசை 5 ஆண்டுக்கு தேர்வு செய்வதற்கான உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்காக மக்களின் உரிமையை நாம் ஒடுக்க முடியாது.
நாடு முழுவதும் அனைத்து கட்சிகளின் கருத்து ஒற்றுமையுடன் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நடைமுறை சாத்தியமில்லை என 2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழுவின் 79வது அறிக்கை முடிவு செய்திருக்கிறது என்பதை இங்கே நினைவூட்டுகிறேன். மேலும் மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இந்த மசோதாவை முதலில் விவாதித்துவிட்டு மீண்டும் அவையில் விவாதத்திற்கு எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications