திமுக ஆட்சி நீடிப்பதில் திடீர் சிக்கல்? நாடாளுமன்ற கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல்?
டெல்லி: நாடு முழுவதும் லோக்சபா, மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வகை செய்யும் "ஒரே நாடு, ஒரே தேர்தல்" மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளதாக டெல்லி தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு திடீர் நெருக்கடி உருவாகி இருக்கிறது.
ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே நாடு ஒரே கல்வி கொள்கை, ஒரே நாடு ஒரே மதம் என்பது உள்ளிட்டவை பாஜகவின் சித்தாந்தங்கள். இதனை செயல்படுத்துவதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு முனைப்பாக உள்ளது. இந்த வரிசையில்தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு செயல்படுத்த களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற கூட்டம்: நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் செப்டம்பர் 18-ந் தேதி முதல் செப்டம்பர் 22-ந் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று திடீரென அறிவித்தார். மத்திய அரசு திடீரென நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாக அறிவித்திருப்பது பல்வேறு விவாதங்களையும் சந்தேகங்களையும் தேசிய அளவில் எழுப்பி இருக்கிறது.
பொது சிவில் சட்டம்: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி அதில் சர்ச்சைக்குரிய பல முக்கிய மசோதாக்களை பாஜக அரசு நிறைவேற்றலாம் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. பொது சிவில் சட்டம் மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பாஜக நிறைவேற்றக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: இதைவிட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை அவசர கோலத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றன காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். பொதுவாக லோக்சபா, சட்டசபைகளுக்கு தனித்தனியே தேர்தல் நடத்துவதால் செலவு அதிகம் என்கிற புலம்பல் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் லோக்சபா, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லோக்சபா, சட்டசபைகள் தேர்தல்: தற்போதைய மத்தியில் ஆளும் பாஜக அரசு, லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்தக் கூடும் என ஏற்கனவே கூறப்பட்டு வருகிறது. அப்படி லோக்சபா தேர்தலை நடத்தும் போது ஒட்டுமொத்தமாக நாட்டின் அனைத்து மாநில சட்டசபைகளையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தலாம் எனவும் பாஜக முடிவு செய்வதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

திமுக ஆட்சியும் கலைப்பு?: அப்படி ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா நிறைவேறி, லோக்சபாவுடன் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டால் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியும் கலைக்கப்படும் நிலைமை உருவாகும். 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியை பிடித்த திமுக, ஆட்சிக் காலத்தை முழுமை செய்யாமலேயே சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு தள்ளப்படும். இதேபோல மேற்கு வங்கம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான மாநில சட்டசபைகளின் ஆயுட் காலம் முன்கூட்டியே முடித்து வைக்கப்படக் கூடிய அபாயமும் இருக்கிறது. ஆனால் மத்திய அரசின் இத்தகைய அவசர கோல நடவடிக்கையானது நாட்டில் மிகப் பெரும் அரசியல் குழப்பங்களை உருவாக்கக் கூடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
ஒற்றை ஆட்சி முறை உருவாகும்: உதாரணமாக ஜம்மு காஷ்மீரில் 4 ஆண்டுகளாக தேர்தலே நடத்தப்படாமல் ஜனாதிபதி ஆட்சிதான் அமலில் இருக்கிறது. இதேபோல அரசியல் குழப்பங்கள் உருவாகும் மாநிலங்களில் சட்டசபைகள் முடக்கப்பட்டு அடுத்த லோக்சபா தேர்தல் நடைபெறும் வரை மத்திய அரசின் ஆட்சி- ஜனாதிபதி ஆட்சிதான் அமலில் இருக்கும் என்கிற நிலைமை உருவாக்கப்படும். இது நாட்டில் ஒற்றையாட்சி முறையை உருவாக்கிவிடும் அபாயம் உள்ளது எனவும் எச்சரிக்கப்படுகிறது.
பூகம்பத்தை புல்டோசர் மூலம் வரவழைக்கிறது பாஜக?
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications