ஒரே நாடு ஒரே தேர்தல்- முதல் முறை நடந்த மின்னணு வாக்குப் பதிவில் திடீர் கோளாறு- அதிர்ச்சியில் பாஜக!
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக் குழு விசாரணைக்கு அனுப்புவது தொடர்பான வாக்கெடுப்பில் முதல் முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் லோக்சபாவில் பாதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததால் வாக்குச் சீட்டு முறை பயன்படுத்தப்பட்டது; லோக்சபாவிலேயே ஒரே மாதிரி தேர்தல் நடத்த முடியாதவர்களால் நாடு முழுவதும் ஒரே தேர்தலை எப்படி நடத்த முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார் சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற லோக்சபாவில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால் இந்த மசோதவை தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவை தொடக்க நிலையிலேயே அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களும் கடுமையாக எதிர்த்தனர். இந்தியா கூட்டணியின் எம்பிக்கள் இந்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தினர். அதேநேரத்தில் தெலுங்குதேசம், ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஜேடியூ, ஜேடிஎஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் இந்த மசோதாவை ஆதரித்தன.
நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்ற 3-ல் 2 பங்கு பெரும்பான்மை தேவை. இந்தப் பெரும்பான்மை இல்லை என்பது பாஜக கூட்டணி அரசுக்கு தெரியும். இதனால் லோக்சபாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி விரிவான விவாதம் நடத்த விரும்புகிறார் பிரதமர் மோடி; அதனையே எதிர்க்கட்சிகளும் விரும்புகின்றனர் என்றார்.
இதனையடுத்து இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் முதல் முறையாக இன்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த வாக்கெடுப்பின் போது பாதி எம்பிக்கள் முன் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் பாதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், பாதிவு வாக்குச் சீட்டு முறை கடைபிடிக்கப்பட்டது. இறுதியாக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப அதிக எம்பிக்கள் வாக்களித்ததாக அறிவிக்கப்பட்டது.
தற்போது மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கும் போது பாதி பேரின் இருக்கையில் தான் மின்னணு வாக்கு இயந்திரம் வேலை செய்தது. மீதி பேர் வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தனர்.
ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்தலை நடத்தப்போவதாக சட்டதிருத்தம் கொண்டுவருகிறது.

ஜனநாயகம் .
கூட்டாட்சி .
மக்கள் கருத்து .
மூன்றின் அடிப்படையையும் அறுத்தெரியும் சட்ட வரைவு.
"ஒரே தேர்தல்" என்பது தேர்தலையே ஒழிக்கும் பாசிச மனோபாவம் என்பதை அம்பலப்படுத்துவோம்!
ஜனநாயகத்தின் மீது ஏவப்பட்டும் இரக்கமற்ற தாக்குதலில் இருந்து இந்தியாவை காப்போம். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications