சேப்டர் குளோஸ்! ஒரே நாடு ஒரே தேர்தல்- தூக்கி கடாசிய மத்திய பாஜக அரசு-நிம்மதியில் ஸ்டாலின், மமதா!
டெல்லி: தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மத்திய பாஜக அரசின் திட்டம் ஓரங்கட்டி மூலையில் வைக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் ஆளும் திமுக, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுகளுக்கு தற்காலிக நிம்மதியை கொடுத்துள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதில் திடீரென தீவிரம் காட்டியது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவும் ஆலோசனைகளை நடத்தியது.

ஒரே நாடு ஒரே தேர்தல்: 2024 லோக்சபா தேர்தலுடன் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவே மத்திய அரசு இத்தகைய முயற்சிகளை மேற்கொள்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருந்தது. அதேநேரத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் செலவினங்கள் எவ்வளவு குறைகிறது தெரியுமா? என மத்தியில் ஆளும் பாஜக தரப்பும் பட்டியல் போட்டு விவாதித்தது.
சந்தேகத்தை கிளப்பிய ஒரே நாடு ஒரே தேர்தல்: இதனால் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் 5 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்பதும் கேள்விக்குறியாக இருந்தது. இதில் இன்னொரு அம்சம் என்னவெனில் தேர்தலை சந்திக்க இருக்கும் 5 மாநிலங்களில் பாஜகவுக்கு சாதகமான மாநிலம் ராஜஸ்தான் மட்டும்தான். இதனால் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக சட்டசபை தேர்தல்களை நடத்தி தமக்கான எதிர்ப்பு அலையை பாஜக கூர்மைப்படுத்திக் கொள்ள விரும்பாது; ஆகையால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முழக்கத்துடன் 2024 லோக்சபா தேர்தலுடனேயே 5 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடக்கலாம் எனவும் ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டன.

5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு: தற்போது ஒருவழியாக தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் தேதியை அறிவித்துவிட்டது இந்திய தேர்தல் ஆணையம். நவம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை நடைபெறும் இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை டிசம்பர் 3-ந் தேதி நடைபெற உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் இல்லவே இல்லை: இதன் மூலமாக ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை மத்திய பாஜக இப்போதைக்கு செயல்படுத்த வாய்ப்பே இல்லை என்பதும் உறுதியாகிவிட்டது. 2024 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று அதன் பின்னர் 2029-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வாய்ப்பிருக்கிறது என்பதையே இப்போதைய தேர்தல் தேதி அறிவிப்பு வெளிப்படுத்தி இருக்கிறது.

ஸ்டாலின், மமதா நிம்மதி: இதனால் இரண்டரை ஆண்டுகளே ஆட்சியில் இருந்து வரும் தமிழ்நாட்டின் திமுக அரசு, மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் அரசு உள்ளிட்ட மாநில அரசுகள் பெரும் நிம்மதியில் இருக்கின்றன. 2021 சட்டசபை தேர்தல்களை சந்தித்த மாநில அரசுகள் முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்துவிடும் என்பதால் இம்மாநில முதல்வர்களான மு.க.ஸ்டாலின், மமதா பானர்ஜி உள்ளிட்டோர் இந்த தேர்தல் தேதி அறிவிப்புகள் மூலம் நிம்மதி பெருமூச்சுவிடுவது என்பது நிதர்சனமானது.
"இந்தியா" கூட்டணி ஜரூர்?: ஒரே நாடு ஒரே தேர்தல் இப்போதைக்கு இல்லை என்பதால் 2024 லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள இனி எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி முழு வீச்சில் கனஜோராக களப் பணிகளைத் தொடங்கக் கூடும் என்பதும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications