வெட்கக்கேடு.. விராட் கோலி 9 மாத கைக் குழந்தைக்கு பாலியல் மிரட்டல்.. பெண்கள் ஆணையம் விசாரணை
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி 9 மாத குழந்தைக்கு பாலியல் மிரட்டல்கள் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது . இதுதொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கி இருக்கிறது.
Recommended Video
நடப்பு உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மிகவும் மோசமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவிய இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தானை சந்திக்க உள்ளது. அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக அரையிறுதி செல்லும் வாய்ப்பு குறைந்துவிட்டது.

கடும் விமர்சனங்கள்
இந்த நிலையில்தான், இந்திய அணி வீரர்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். சமூகவலைதளங்களில் அவர்கள் வறுபடாத நாட்கள் இல்லை. ஆனால் வீரர்களை விமர்சிப்பது நியாயம் என்ற போதிலும் கூட, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்குறிவைத்து சமூக வலைத்தளங்களில் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

9 மாத குழந்தை
அதிலும், விராட் கோலி மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்த தம்பதியின் 9 மாதங்கள் நிரம்பிய பச்சிளம் பெண் குழந்தைக்கு பாலியல் ரீதியாக டுவிட்டர் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இந்த ட்வீட்டர் இப்போது டெலிட் செய்யப்பட்டு விட்டது. இருப்பினும் ஸ்கிரீன் ஷாட்டில் எடுக்கப்பட்டு பலராலும் கடும் கண்டனங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.

ஆன்லைன் துன்புறுத்தல்
ஒரு கிரிக்கெட் வீரர் சரியாக விளையாடவில்லை என்பதற்காக அவரது மகள் பாலியல் ரீதியாக ஆன்லைன் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ள சம்பவம் பொதுமக்களுக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது. இன்னும் சிலர் இந்த ட்வீட் பாகிஸ்தான் நாட்டிலிருந்து செய்யப்பட்டது இந்தியர்களை மோசமாக காட்டவேண்டும் என்ற சதி, இதன் பின்னணியில் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

டெல்லி போலீசுக்கு நோட்டீஸ்
இந்த நிலையில்தான் டெல்லி மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு விசாரணையை தொடங்கியிருக்கிறது. டெல்லி காவல்துறைக்கு இது தொடர்பாக அது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெண்ணின் உடலை பற்றி மோசமாக கருத்து பதிவிடுவது மிகவும் சீரியஸ் விஷயம் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

வெட்கக்கேடு
இந்த சம்பவம் வெட்கக்கேடானது உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று பெண்கள் ஆணையத்தின் தலைவர் சுவாதி தெரிவித்துள்ளார். சைபர் கிரைம் காவல்துறையினரும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications