370-வது பிரிவு ரத்துக்கு பின் வெளிமாநிலத்தவர் 2 பேர்தான் காஷ்மீரில் சொத்து வாங்கினர்- மத்திய அரசு
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட கடந்த 2 ஆண்டுகளில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 2 பேர் மட்டுமே அம்மாநிலத்தில் சொத்துகள் வாங்கி உள்ளதாக லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரின் தனித்தன்மையை பாதுகாக்கும் வகையில் பிற மாநிலத்தவர்கள் அங்கு சொத்துகள் வாங்க முடியாது என்பது உள்ளிட்ட அம்சங்கள் நடைமுறையில் இருந்தன.
ஆனால் மத்திய பாஜக அரசு கடந்த 2019-ம் ஆண்டு இந்த 370-வது பிரிவை ரத்து செய்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஜம்மு காஷ்மீர் மாநிலமும் 2 ஆக பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன.

காஷ்மீர் நிலவரம்
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா (ஒமர் அப்துல்லா), மெகபூபா முப்தி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறைப்படுத்தப்பட்டனர். இதனால் ஜம்மு காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகள் முற்றாக முடங்கிப் போயின. தற்போதுதான் அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பவும் தொடங்கி இருக்கிறது.

காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகள்
அண்மையில் ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். அப்போது தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில தகுதி வழங்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது ஜம்மு காஷ்மீரில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரும் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில தகுதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.

சொத்து வாங்கியது 2 பேர்தானாம்
இந்நிலையில் 370-வது அரசியல் சாசனப் பிரிவு நீக்கத்துக்குப் பிறகு- அதாவது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் எத்தனை வெளிமாநிலத்தவர் அங்கு சொத்துகளை வாங்கி இருந்தனர் என எம்.பி.க்கள் லோக்சபாவில் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் எழுத்துப்பூர்வமான பதில் அளித்துள்ளார். அதில், இதுவரை 2 வெளிமாநிலத்தவர் மட்டும்தான் ஜம்மு காஷ்மீரில் சொத்துகள் வாங்கி உள்ளதாக கூறினார். அதேநேரத்தில் ஜம்மு காஷ்மீரில் சொத்துகள் வாங்க விண்ணப்பித்திருக்கும் வெளி மாநிலத்தவர் குறித்த விவரங்களை மத்திய அரசு தெரிவிக்கவில்லை.

விவாதப் பொருள்
மத்திய அரசின் இந்த பதில் இப்போது விவாதத்துக்குரியதாகவும் மாறி இருக்கிறது. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட போது, இனி இந்தியாவின் அத்தனை மாநிலத்தவரும் ஜம்மு காஷ்மீரில் போய் குடியேற முடியும்; நிலம்,வீடுகள் என சொத்துகள் வாங்க முடியும் என்றெல்லாம் பாஜக உள்ளிட்ட வலதுசாரி சக்திகள் தீவிரமாக பிரசாரம் செய்தனர். அரசியல், புவியியல் யதார்த்தம் புரியாமலும் ஜம்மு காஷ்மீர் மக்களின் உணர்வுகளை அறியாமலும் இத்தகைய கருத்துகளை வலதுசாரிகள் பரப்பி வந்தனர். ஆனால் அப்படி பேசியவர்கள், தீவிரமாக ஜம்மு காஷ்மீர் குறித்து விவாதித்தவர்கள் கூட அங்கே போய் சொத்து வாங்க முன்வரவில்லை. இப்போதுவரை 2 பேர் மட்டுமே சொத்துகளை வாங்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்!












Click it and Unblock the Notifications