மோடி பேசியது தவறுதான்..தனியாளாக எதிர்த்த தேர்தல் அதிகாரி.. என்ன நடந்தது தேர்தல் ஆணைய விசாரணையில்?
பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக தேர்தல் ஆணையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக தேர்தல் ஆணையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறை மீறல் செய்ததாக புகார் உள்ளது. இவர்கள் இருவர் மீதும் 6க்கும் மேற்பட்ட புகார்கள் உள்ளது. இதில் இரண்டு வழக்குகள் மீது ஏற்கனவே தேர்தல் ஆணையம் முடிவெடுத்து இருக்கிறது.
இந்த இரண்டு புகார்களில் தேர்தல் ஆணையம் ஒரு மனதாக முடிவெடுக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் ஆணையத்தில் விசாரணை அதிகாரிகள் மூன்று பேரில் ஒரு அதிகாரி மட்டும் மோடிக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார்.

இரண்டு கேஸ்கள்
பிரதமர் மோடி மீது தொடுக்கப்பட்ட புகார்களில் 2 புகார்கள் மீதான நடவடிக்கை மட்டும் இப்போது எடுக்கப்பட்டு இருக்கிறது.
புகார் 1: பிரதமர் மோடி வர்தாவில் பேசும் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மெஜாரிட்டி மக்களை பார்த்து பயப்படுகிறார். அதனால்தான் அவர் மைனாரிட்டி இருக்கும் வயநாட்டில் சென்று போட்டியிடுகிறார், என்று குறிப்பிட்டார்.
புகார் 2: பிரதமர் மோடி லாத்துரில் பேசும் போது, நாம் நம் ராணுவ வீரர்களுக்காக வாக்களிக்க வேண்டும். முதல்தலைமுறை வாக்காளர்கள் ராணுவ வீரர்களை மனதில் வைத்தும், நாம் நடத்திய பாலக்கோடு தாக்குதலை நினைவில் கொண்டும் வாக்களிக்க வேண்டும், என்றார்.

என்ன முடிவு
இந்த இரண்டு புகாரில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு பேச்சிலும் மோடி எந்த விதமான தவறான தகவலையும் பேசவில்லை என்று தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது. இதனால் இது தொடர்பான இரண்டு புகாரில் இருந்தும் பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.

யார் முடிவு
மொத்தம் மூன்று பேர் இந்த புகாரை விசாரித்தனர். தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் அதிகாரிகள் அசோக் லவசா மற்றும் சுஷில் சந்திரா ஆகியோரை விசாரணை நடத்தினார்கள். இதில் இரண்டு அதிகாரிகள் மோடி மீது தவறு இல்லை என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.

ஒருவர் எதிர்த்தார்
ஆனால் இந்த மூன்று அதிகாரிகளில் ஒருவர் மட்டும், மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். ஆனால் இவர் யார் என்ற விவரம் வெளியாகாது. மோடி இப்படி பேசியது மிக மிக தவறு என்று அவர் கூறி இருக்கிறார். ஆனாலும் மெஜாரிட்டியாக இரண்டு அதிகாரிகள் மோடிக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்தனர். இதனால் மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications