அஇஅதிமுக மக்களவை தலைவர் ரவீந்திரநாத்.. குளிர்கால கூட்டத் தொடருக்கு மத்திய அரசு அழைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் அம்சங்கள் குறித்த இன்று மாலை நடைபெறும் அனைத்து கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக சார்பில் மக்களவை தலைவராக நான் கலந்து கொள்கிறேன் என ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

இதற்கான கடிதத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனுப்பியுள்ளார். இதுகுறித்த கடிதத்தில் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.

OP Ravindranath was invited by Centre by mentioning him as AIADMK MP

இதற்காக அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அநத வகையில் நீங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தி முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என பிரகலாத் ஜோஷி கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் அந்த கடிதத்தில் பெறுநர் என்ற இடத்தில் ஸ்ரீ பி ரவீந்திரநாத், அஇஅதிமுக மக்களவை தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை ரவீந்திரநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது நாளை (20.07.2023) புதுடெல்லியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று (19.07.2023) மதியம் 03.00 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து ஆலோசிப்பதற்காக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தின் சார்பாக அழைப்பு விடுத்ததின் பேரில் பாராளுமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் கழக மக்களவை தலைவராக நான்‌ கலந்து கொள்ள உள்ளேன். இவ்வாறு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதே பிரகலாத் ஜோஷிதான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஜி20 நாடுகளுக்கான மாநாட்டு ஆலோசனை கூட்டத்திற்கு இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்த எடப்பாடி பழனிசாமியை அஇஅதிமுக பொதுச் செயலாளர் என அழைப்பிதழில் குறிப்பிட்டு அழைத்திருந்தார்.

இந்த நிலையில் ஓபிஆர் குறித்த கடிதம் பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டார். அது போல் நேற்று நடந்த தேசிய அளவிலான என்டிஏ கூட்டணி கட்சியினர் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.

OP Ravindranath was invited by Centre by mentioning him as AIADMK MP

ஆனால் ஓபிஎஸ்ஸை அழைக்கவில்லை. இதன் மூலம் அதிமுக என்றால் அது எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக இருக்கும் அணிதான் என மத்திய அரசு கருதுவதாக தெரிகிறது. இதனால் இனி அதிமுகவின் பெயரையும் கொடியையும் ஓபிஎஸ் உள்பட கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் வென்ற ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் செல்லாது என தீர்ப்பு அளித்துவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தீர்ப்பை நீதிபதி நிறுத்தி வைத்துள்ளதாகவும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+