பழிக்கு பழி.. பாகிஸ்தானுக்கு பதிலடி தந்த இந்தியா.. டிரம்ப் யார் பக்கம்? பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த மாதம் 22ம் தேதி காஷ்மீரில் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று நம் நாடு தாக்குதலை நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு, 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் இந்த தாக்குதல் தொடர்பாக டொனால்ட் டிரம்ப் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

pakistan india donald trump

நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை 25 நிமிடம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. மொத்தம் 25 நிமிடங்கள் வரை இந்த தாக்குதல் நடந்தது. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயர் வைக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கொக்கரித்துள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் அதற்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வார்னிங் செய்துள்ளார். இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் என்பது ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையே தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டொனால்ட் டிரம்ப்,‛‛இது மிகவும் மோசமானது. நான் இருநாடுகளுடன் பழகி வருகிறேன். எனக்கு இரண்டு நாடுகளும் நன்கு தெரியும். இந்த பிரச்சனையை அவர்களே சரிசெய்ய முடியும் என்று நம்புகிறேன்.

தாக்குதல்களை அவர்கள் நிறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்போது அவர்களால் தாக்குதல்களை நிறுத்த முடியும். அவர்கள் பழிக்கு பழியாக பதிலடி கொடுத்துள்ளனர். இருவருடனும் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது. ஏதாவது உதவி செய்ய முடிந்தால் நான் நிச்சயம் உதவி செய்வேன்'' என்றார். இதன்மூலம் டொனால்ட் டிரம்ப் இந்தியா - பாகிஸ்தான் மோதலில் நுழைய விரும்பவில்லை என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார்.

இதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட இருநாடுகள் இடையேயான பதற்றம் பற்றி கேட்டபோது, ‛‛காஷ்மீர் பிரச்சனை என்பது 1000 ஆண்டுகளாக உள்ளது. இதனை இருநாடுகளும் பேசி தீர்க்க முடியும் என்று தெரிவித்து இருந்தார். இப்போதும் கூட பிரச்சனையை இருவராலும் தீர்க்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று காலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியா தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இந்தியா - பாகிஸ்தான் இடையேயான நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை தான் நான் மீண்டும் சொல்ல விருமு்புகிறேன். இந்த மோதல் சீக்கிரமாக முடியும் என்று நம்புகிறோம். அதேபோல் இந்தியா மற்றும் பாகிஸ்தன் தலைவர்கள் அமைதியை நோக்கிய ஒப்பந்தத்தை நோக்கி செல்வார்கள் என்று நம்புகிறேன்'' என்று கூறியிருந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+