குறி வச்சா இரை விழணும்.. ஆபரேஷன் சிந்தூர் ஆக்ஷன்! புதிய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்
டெல்லி: இந்தியா மீது பாகிஸ்தான் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயற்சித்த நிலையில் அதனை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அழித்து ஒழித்தது. 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பான புது வீடியோ ஒன்றை இந்திய ராணுவத்தின் மேற்கு பிராந்திய தலைமை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் ஏவிய ஆயுதங்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்திய காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளது. தரையில் இருந்து வானை நாங்கள் பாதுகாக்கிறோம் என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால், கோபம் அடைந்த பாகிஸ்தான் நம் நாட்டின் மீது டிரோன்களை கொண்டு தாக்கியது. பாகிஸ்தானில் இருந்து அணி வகுத்து வந்த நூற்றுக்கணக்கான டிரோன்களை இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் வெற்றிகரமாக துவம்சம் செய்தது.

ஹாட்லைன் பேச்சுவார்த்தை
அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியும் கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள விமானப்படைதளங்களும் இந்தியா நடத்திய பதிலடி தாக்குதலில் பலத்த சேதம் அடைந்தன. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிலான இந்தியாவின் ராணுவ நடவடிக்கை பாகிஸ்தானை கலங்கடித்தது. இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்கள் நீடித்த இந்த ராணுவ மோதலால் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் உருவானது.
இதைத்தொடர்ந்து இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் ஜெனரல்கள் ஹாட்லைன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் மூலம் கடந்த 10 ஆம் தேதி மாலையில் இருந்து இருதரப்புக்கு இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பு ராணுவ ஜெனரல்களும் 12 ஆம் தேதி மீண்டும் பேசினர். அப்போது இந்த சண்டை நிறுத்தத்தை தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும் இரு தரப்பும் எல்லைகள் மற்றும் முன்னணி நிலைகளில் நிறுத்திய படைகளை விலக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
புதிய வீடியோ வெளியீடு
இந்தியா - பாகீஸ்தான் போர் பதற்றம் தணிந்தாலும் இந்திய ராணுவம் எல்லையில் உஷார் நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. ஏதேனும் அடாவடி செயலில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டால் உனடியாக பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரத்தையும் அரசு அளித்துள்ளது. இதற்கிடையே, இந்திய ராணுவம் மேற்கோண்ட அதிரடி நடவடிக்கைகள் தொடர்பான வீடியோவை ராணுவம் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வருகிறது.
இந்திய ராணுவத்தின் மேற்கு பிராந்திய தலைமை, 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் ஏவிய ஆயுதங்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்திய காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளது. தரையில் இருந்து வானை நாங்கள் பாதுகாக்கிறோம் என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
நீதி வழங்கப்பட்டது

இந்திய வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த டிரோன்களை பீரங்கி மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட ஆயுதங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டன. சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு பாகிஸ்தான் டிரோனின் சேதம் அடைந்த பாகங்களை மீட்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. ராணுவம் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- "நாம் எப்போதும் விழிப்புடனும் கண்காணிப்புடனும் இருப்போம். அப்போதுதான் தேசம் அமைதியாக தூங்க முடியும். தரையில் இருந்து நாங்கள் வானை பாதுக்கிறோம்" என்று கூறியுள்ளது.
#StrongAndCapable#OpSindoor#LayeredDefence
— Western Command - Indian Army (@westerncomd_IA) May 19, 2025
" From the ground, we protected the Skys”#JusticeServed@adgpi@prodefencechan1 pic.twitter.com/oiZuVKpBem
நீதி வழங்கப்பட்டது என்ற அர்த்தம் வரும் justiceserved என்ற ஹேஷ்டேக்கையும் ராணுவம் பகிர்ந்துள்ளது. பாகிஸ்தான் இந்தியா பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதற்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள 11 விமானப்படை தளங்கள், ரேடார் அமைப்புகள், கம்யூனிகேஷன் செண்டர்கள், விமான தளங்கள் ஆகியவற்றை குறிவைத்து பெரிய அளவில் இந்தியா பதிலடி தாக்குதலை நடத்தியது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications