குற்றத்தை நிகழ்த்திவிட்டு பயங்கரவாதிகள் தப்ப முடியாது - இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த இஸ்ரேல்
டெல்லி: பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவின் பதில் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. கொடூர தாக்குதலை நிகழ்த்திவிட்டு பயங்கரவாதிகள் தப்பிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக இந்தியா நள்ளிரவில் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் என 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டுள்ளது. முப்படைகளும் இந்த தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய்ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர் என்று பதிவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில், இந்தியா போர் அல்லாமல் 1972 ஆம் ஆண்டுக்கு பிறகு நடத்தியுள்ள மிகப்பெரிய தாக்குதல் இது என்று தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்த பதிலடி தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது. இது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் மட்டுமே. பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் இல்லை என்று இந்தியா கூறியிருந்தது. ஆனாலும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அந்த நாடு அறிவித்துள்ளது.
இந்திய ராணுவம் நடத்திய இந்த தாக்குதலுக்கு பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்திற்கும், பிரதமர் மோடிக்கும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் நாடு ஆதரவு தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் குற்றங்களை நிகழ்த்திவிட்டு தப்ப முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கையை இஸ்ரேல் ஆதரிக்கிறது, அப்பாவி மக்களுக்கு எதிராக கொடூரமான குற்றங்களை நிகழ்த்திவிட்டு தப்ப முடியாது என்பதை பயங்கரவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications