இந்தியாவின் கிட்ட கூட பாகிஸ்தானால் வர முடியாது.. ரஃபேல் vs F16 பலம் என்ன தெரியுமா? விவரம்
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்கள் இந்த துல்லிய தாக்குதலுக்கு கைகொடுத்தன. இந்திய விமானப்படையுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தான் விமானப்படையின் பலம் எந்த அளவு உள்ளது. அந்த நாட்டிடம் என்ன மாதிரியான போர் விமானங்கள் உள்ளன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையில் சுமார் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

பயங்கரவாத முகாம்கள் மட்டும் குறி
இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர், இந்தியா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதலை இந்தியா நடத்தியுள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரிலான இந்திய ராணுவத்தின் துல்லிய தாக்குதல்கள், 9 பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் வான் வலிமை
பாகிஸ்தானின் ராணுவ நிலைகள், பொதுமக்கள் குறிவைக்கப்படவில்லை. இந்தியாவின் நடவடிக்கையை போராகவே கருதுவோம் என்று கூறியுள்ள பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியுள்ளது. பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்களை வைத்து இந்த துல்லிய தாக்குதலை இந்தியா நடத்தியுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியாவின் வான் வலிமையை ஒப்பிடும் போது பாகிஸ்தான் பலமடங்கு பின் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
4.5 ஜெனரேஷன் போர் விமானமான ரஃபேல் விமானம், இந்திய விமானப்படையில் உள்ள அதி நவீன போர் விமானம் ஆகும். எலக்ட்ரானிக்ஸ் தளவாடங்கள், மேம்பட்ட ரேடார் டெக்னாலஜி என இதில் நவீனதொழில் நுட்பங்கள் உள்ளன. இந்திய விமானப் படையில் 13 ரஃபேல் விமானங்கள் உள்ளன. SCALP ஏவுகணை மற்றும் HAMMER குண்டுகளை வீசும் திறன் கொண்டவை இந்த விமானங்கள்,
அமெரிக்கா போட்ட கட்டுப்பாடுகள்
இந்த இரண்டையும் பயன்படுத்தியே இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கோண்டுள்ளது. அதேசமயம் பாகிஸ்தானிடம் அதி நவீன போர் விமானம் என்றால் எஃப் 16 உள்ளது. ஆனால், இவற்றை இஷ்டத்திற்கு பயன்படுத்த முடியாது. காரணம் அமெரிக்கா போட்ட கட்டுப்பாடுகள்தான். அமெரிக்கா இந்த விமானங்களை வழங்கும் போது இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் உள்நாட்டு பாதுகாப்பு பணிக்காக மட்டுமே இந்த விமானங்களை பயன்படுத்த முடியும். ரஃபேலுடன் ஒப்பிடும் போது இது தொழில் நுட்பத்திலும் பின் தங்கியதுதான். பாகிஸ்தானிடம் இது போக ஜேஎப் -17 தண்டர் என்ற போர் விமானம் உள்ளது. இந்த விமானம் பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து உருவாக்கியது ஆகும்.
அருகில் கூட வர முடியாது
ஜே எப் 17 விமானம் இலகு எடை கொண்டது. ஒற்றை என்ஜின் கொண்ட இந்த விமானம், சென்சார் குறைபாடுகள் உள்ளிட்டவை கொண்டது. ரஃபேல் அளவிற்கு நவீன தொழில் நுட்பம் கொண்டது இல்லை. ரஃபேல் போர் விமானத்தில் உள்ள தொழில் நுட்பம் மற்றும் அதனை பயன்படுத்த எந்த வித கட்டுப்பாடும் இந்தியாவுக்கு இல்லை என்பதால், இந்திய விமானப்படையின் பலத்திற்கு அருகில் கூட வர முடியாத அளவிற்குதான் பாகிஸ்தான் விமானப்படையின் பலம் உள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications