Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபரேஷன் சிந்தூர்.. எந்த அழுத்தத்தினாலும் நடவடிக்கையை நிறுத்தவில்லை! லோக்சபாவில் ராஜ்நாத் சிங் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "பாகிஸ்தான் மீதான தாக்குதலை எந்த அழுத்ததாலும் நிறுத்தவில்லை.. நான் பொய்சொல்லவில்லை.. நோக்கம் நிறைவேறியதால்தான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நிறுத்தினோம். இந்திய ராணுவ தளவடாங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. பாகிஸ்தானால் இந்தியாவின் எந்த ஒரு இடத்தையும் தகர்க்க முடியவில்லை" என்று கூறினார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து பேசினார். அவர் கூறியதாவது:-

operation-sindoor-was-not-stopped-due-to-any-pressure-rajnath-singh-explains-in-lok-sabha

தோல்வியை ஒப்புக்கொண்டது பாகிஸ்தான்

இந்தியாவின் நவீன ஏவுகணைகள் மூலம் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தோம்.. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திவிட்டு அந்நாட்டின் ராணுவ உயர் ராணுவ அதிகாரிகளிடம் தெரிவித்தோம்.. பாகிஸ்தான் ஏவிய டிரோன்களை எஸ் 400 ஏவுகணைகள் மூலம் இடைமறித்து அழித்தோம்..

இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு உடனடியாக பதிலடியை கொடுத்தது. இந்திய ஏவுகணைகளை பயன்படுத்தி 22 நிமிடங்களில் பாகிஸ்தான் நிலைகள் தகர்க்கப்பட்டன. பாகிஸ்தான் அனைத்து தாக்குதல்களையும் இந்திய ராணுவம் முறியடித்தது. போரை நிறுத்த முதலில் பாகிஸ்தான் அதிகாரிகள் நம்மை தொடர்பு கொண்டனர். தோல்வியை ஒப்புக்கொண்டு போரை நிறுத்த பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டார்கள்.

எந்த அழுத்தத்தாலும் நிறுத்தவில்லை

சண்டை நிறுத்ததத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால் இந்தியா பதிலடி கொடுத்தது. இந்திய ராணுவ தளவடாங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. பாகிஸ்தானால் இந்தியாவின் எந்த ஒரு இடத்தையும் தகர்க்க முடியவில்லை. பாகிஸ்தான் பொய் பிரசாரம் செய்தது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு மரியாதை கொடுத்தது.

பாகிஸ்தானின் பயங்கரவாத இடங்கள் மட்டுமே எங்கள் இலக்காக இருந்தது. பாகிஸ்தான் மீதான தாக்குதலை எந்த அழுத்தத்தாலும் நிறுத்தவில்லை.. நான் பொய்சொல்லவில்லை.. நோக்கம் நிறைவேறியதால்தான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நிறுத்தினோம். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் வரலாற்று சிறப்பு மிக்க தாக்குதல் நடத்தியுள்ளோம். போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தான் முதலில் இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

துளி அளவும் சந்தேகப்பட வேண்டாம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்ததை உலகமே பார்த்தது. இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையினை துளி அளவும் சந்தேகப்பட வேண்டாம். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதால் தான் நாம் எதிர்க்கிறோம். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்ததால் தான் ஆபரேஷன் நடவடிக்கை எடுத்தது.

பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக தாக்கப்பட்டன. பயங்கரவாதத்தை வளர்க்கும் இடங்கள் மட்டுமே எங்களது இலக்காக இருந்தது. பயங்கரவாதிகளை இருக்கும் இடங்களை குறிவைத்து மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியது. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத முகாம்கள் வெறும் 22 நிமிடங்களில் அழிக்கப்பட்டது. இந்தியாவின் அதி நவீன ஏவுகணைகளை வைத்து இந்த துல்லிய தாக்குதலை மேற்கொண்டது.

பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறது

இந்திய மகளிரின் சிந்தூர் அழிக்கப்பட்டதற்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டது. பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடக்காது. பாகிஸ்தான் ஆதரவுடன் தான் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளது. முதலில் தோழமையை தான் இந்தியா விரும்பும். தாக்க முயற்சித்தால் கையை முறித்துவிடும். பாகிஸ்தானுக்கு புரியும் மொழியில் பதில் தரப்படும். பாகிஸ்தான் எப்போது தாக்குதல் நடத்த முயற்சித்தாலும் இந்தியா பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறது.. இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+