டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை வாசிக்கவிடாமல் முழக்கங்கள் எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 பட்ஜெட்டைப் படிக்கத் தொடங்கியவுடன் சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விவசாயிகளுக்கு ஆதராவாக முழக்கங்களை எழுப்பினர்.

நிர்மலா சீதாராமன் தனது மூன்றாவது மத்திய பட்ஜெட்டை முன்வைத்த போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டதால் அவரது உரையை கேட்கமுடியவில்லை.

Opposition MPs raise slogans as nirmala sitharaman begins Budget speech

காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜஸ்பீர் சிங் கில் மற்றும் குர்ஜீத் சிங் ஆஜ்லா ஆகியோர் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக நாடாளுமன்றத்திற்கு கருப்பு அங்கி அணிந்து வந்திருந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லியின் எல்லைகளில் போராடி வரும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ஆதரவாக கருப்பு உடை அணிந்து வந்து அவர்கள் பட்ஜெட் உரைக்கு எதிராக குரல் எழுப்பினர்.

இதனிடையே கூச்சல் குழப்பத்திற்க இடையே பட்ஜெட் உரையை வாசித்த நிர்மலா சீதாராமன், முன்னெப்போதும் இல்லாத சூழலில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். லாக்டவுனால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் அமல்படுத்தப்படாவிட்டால் நாம் பெரும் சேதத்தை சந்திக்க நேர்ந்திருக்கும் என்றார்.

 அதிரடி.. நமக்கு யார் கரண்ட் வேண்டும்.. இனி நாமே தேர்வு செய்யலாம்.. மத்திய அரசு அறிவிப்பு அதிரடி.. நமக்கு யார் கரண்ட் வேண்டும்.. இனி நாமே தேர்வு செய்யலாம்.. மத்திய அரசு அறிவிப்பு

2 உலகப் போர்களுக்கு பிறகு தற்போது உள்ள நிலையும், சமூக பொருளாதார மறு உருவாக்கம் தேவைப்படக்கூடிய அளவில் உள்ளது. உலகிலேயே மிக குறைந்த இறப்பு விகிதமாக ஒரு மில்லியனுக்கு 112 பேர் என்ற அளவில் இந்தியாவில் கொரோனா காலத்தில் உயிரிழப்பு இருந்தது என்றார்.

மத்திய பட்ஜெட் 2021 முதன்முறையாக காகிதமற்ற வடிவத்தில் எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை மேட் இன் இந்தியா டேப்லெட்டில் வாசித்தார்.

English summary
some Opposition MPs raised slogans over the farmers' protest as soon as Finance Minister Nirmala Sitharaman began the reading of Budget 2021. In the initial few seconds of her speech, Sitharaman, presenting her third Union Budget, was barely audible as sloganeering by Opposition MPs drowned her voice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X