நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை ஆரம்பித்ததும் எதிர்க்கட்சிகள் அமளி.. வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2025 - 26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் நெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்ததால் எதிர்கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி 9 அமர்வுகளாக பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டை எட்டாவது முறையாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நடுத்தர வர்க்கத்தினர் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை பலரும் இந்த பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

budget 2025 union budget 2025 nirmala sitharaman

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிரமலா சீதாராமன் தாக்கல் செய்ய தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். கடும் அமளிக்கு நடுவே பட்ஜெட் உரையை நிர்மலா வாசித்தார்.

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் நெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்ததால் எதிர்கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+