ராஜ்யசபா எம்பிக்கள் சஸ்பெண்ட் - லோக்சபா கூட்டத்தையும் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவிப்பு
டெல்லி: ராஜ்யசபாவில் 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராகவும் வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் லோக்சபா கூட்டத்தையும் புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
ராஜ்யசபாவில் வேளாண் மசோதாக்களை மரப்புப் படி விவாதிக்காமல் முறைகேடாக மத்திய அரசு நிறைவேற்றியது என்பது எதிர்க்கட்சிகளின் புகார். இதனால் ஞாயிற்றுக்கிழமையன்று ராஜ்யசபாவில் பெரும் அமளி ஏற்பட்டது.

ராஜ்யசபா எம்.பிக்கள் சஸ்பெண்ட்
இந்த அமளியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரெய்ன் உட்பட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த 8 எம்.பிக்களும் தங்களது சஸ்பெண்ட் உத்தரவுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

ராஜ்யசபா புறக்கணிப்பு
இதனிடையே ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷும் தாமும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்போம் என அறிவித்தார். இன்னொரு பக்கம், எம்.பிக்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறும் வரை ராஜ்யசபா நடவடிக்கைகளைப் புறக்கணிப்போம் என எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருக்கின்றன.

லோக்சபாவில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
இந்நிலையில் லோக்சபாவில் காங். குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், லோக்சபாவும் ராஜ்யசபாவும் இரட்டை குழந்தைகள்.. ஒரு சபையில் வருந்தத்தக்க நிகழ்வுகள் நடைபெற்றால் இன்னொரு சபைக்கும் வருத்தம் ஏற்படும். எங்களைப் பொறுத்தரவை வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு இந்த மசோதாக்களை திரும்பப் பெற்றால் சபையை தொடர்ந்து நடத்தலாம். இல்லை எனில் நாங்கள் சபை நடவடிக்கைகளை புறக்கணிக்கிறோம் என்றார்.

லோக்சபா நடவடிக்கைகள் புறக்கணிப்பு
இதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகால் ஜோஷி எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசுகையில், இன்னொரு சபை நிகழ்வுகளை மக்களவையில் விவாதிக்கக் கூடாது. இப்படி விவாதித்துக் கொண்டிருப்பது துரதிருஷ்டவசமானது என சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் வேளாண் மசோதாக்களுக்கு எதிராகவும் 8 ராஜ்யசபா எம்.பிக்கள் மீதான நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும் லோக்சபா கூட்டத்தைப் புறக்கணித்தன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications