‛பயந்த எதிர்க்கட்சிகள்’.. ‛இந்தியா’ கூட்டணியில் நிதிஷ் குமாருக்கு முக்கிய பொறுப்பு! என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‛இந்தியா' கூட்டணியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதிருப்தியில் உள்ளார். இதனை அவர் மறைமுகமாக வெளிக்காட்டி வரும் நிலையில் தான் அவருக்கு ‛இந்தியா' கூட்டணியில் முக்கிய பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் என்பது நடைபெற வாய்ப்புள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் அதற்கான பணிகளை விரைவுப்படுத்தி உள்ளன.

 Oppostion parties decided CM Nitish Kumar may appoints convenor of ‛INDIA’ aliance

2014, 2019 ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலை தொடர்ந்து வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று மத்தியில் 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. அதேவேளையில் இந்த முறை பாஜகவை வீழ்த்தி விட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன.

‛இந்தியா' கூட்டணி: இதற்காக கட்சி பாகுபாடுகளை மறந்து காங்கிரஸ், ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், திமுக உள்பட 28 கட்சிகள் கைகோர்த்து ‛இந்தியா' என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. கடந்த ஆண்டு எதிர்க்கட்சிகள் இணைவதில் பிரச்சனை இருந்த நிலையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் தான் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் ஆர்வமாக செயல்பட்டார்.

அதிருப்தி: மேலும் எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டத்தை பீகார் தலைநகர் பாட்னாவில் நிதிஷ் குமார் நடத்தினார். அதன்பிறகு பெங்களூர், மும்பை மற்றும் கடைசியாக டெல்லியில் ஆலோசனை கூட்டங்கள் நடந்துள்ளன. இப்படி ‛இந்தியா' கூட்டணியில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்துவதில் ஆர்வமாக உள்ளார். ஆனால் இதனை பிற கட்சிகள் விரும்பவில்லை.

மாறாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் பெயரை பரிந்துரை செய்தார். இதனால் நிதிஷ் குமார் மனம் உடைந்து போனார். அதோடு அவர் தனது அதிருப்தியை டெல்லியில் காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் நடந்து முடிந்த ‛இந்தியா' கூட்டணியில் வெளிக்காட்டினார்.

சாடிய நிதிஷ் குமார்: நிதிஷ் குமார் ஹிந்தியில் பேசியதை முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி டிஆர் பாலுவுக்கு புரியவில்லை. இதையடுத்து நிதிஷ் குமாரின் கட்சியை சேர்ந்த எம்பியை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ய டிஆர் பாலு கூறினார். இதற்கு நிதிஷ் குமார் கடிந்து கொண்டார். ஹிந்தி கற்று கொள்ள வேண்டும் என காட்டமாக தெரிவித்தார். இது விவாதத்தை கிளப்பியது.

அதோடு இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் சமோசா தரவில்லை என நிதிஷ் குமாரின் கட்சியை சேர்ந்த தலைவர் குற்றம்சாட்டினார். தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காமல் இருப்பதும், அவருக்கு ‛இந்தியா' கூட்டணியில் வழங்கப்படும் முக்கியத்துவம் குறைவதாலே இப்படி நிதிஷ் குமார் மற்றும் அவரது கட்சியின் தலைவர்கள் நடப்பதாக கூறப்பட்டது.

கலங்கிய கட்சிகள்: மேலும் நிதிஷ் குமார் தற்போது பாஜகவுடன் மோதல் போக்கில் உள்ளது. பீகாரில் பாஜகவுடன் வைத்த கூட்டணியை முறித்து கொண்டு தான் அவர் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரசுடன் கைகோர்த்து முதல்வராக உள்ளார். இருப்பினும் ‛இந்தியா' கூட்டணியில் தனக்கு முக்கியத்துவம் வழங்காத பட்சத்தில் அவர் மீண்டும் பாஜகவுடன் கைகோர்க்கலாம் என்ற தகவலும் பரவ தொடங்கியது. இது ‛இந்தியா' கூட்டணியில் உள்ள தலைவர்களை கலங்கப்படுத்தியது.

முக்கிய பொறுப்பு: இந்நிலையில் தான் நிதிஷ் குமாருக்கு தற்போது ‛இந்தியா' கூட்டணியில் முக்கிய பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ‛இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை நிதிஷ் குமாருக்கு வழங்கி அவரை சமாதானம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக பிற எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் வகையில் இந்த வாரமே வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கெஜ்ரிவால் ஆதரவு: மேலும் இதுதொடர்பாக தற்போது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவுடன் ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மகராஷ்டிராவின் முன்னாள் முதல்வரான சிவசேனா (உத்தவ் அணி) தவைர் உத்தவ் தாக்கரேவிடம் நிதிஷ்குமார் நேற்று பேசியுள்ளார். அதோடு நிதிஷ் குமாரை ஒருங்கிணைப்பாளராக்கும் முடிவுக்கு ஆம்ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+