டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித்ஷாவை ஓபிஎஸ் சந்தித்தபோது இந்த பஞ்சாயத்தும் நடந்ததாமே!

Google Oneindia Tamil News

Recommended Video

    Amit Shah Plan : ஓபிஎஸ் -சை வைத்து அமித்ஷா போடும் திட்டம்!- வீடியோ

    டெல்லி: டெல்லியில் நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபோது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

    தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்து 2 நாட்கள் கூட ஆகாத நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்., பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.

    ops airs his complaints to amit shah

    இந்தச் சந்திப்பின் போது, இ.பி.எஸ்.நடவடிக்கைகள் பற்றியும், தனக்கு ஆட்சியில் உரிய மரியாதை இல்லை என்பதை பற்றியும் புகார் வாசித்தாராம் ஓ.பி.எஸ். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அமித்ஷா, அவசரப்பட வேண்டாம் பொறுமையாக இருக்குமாறு கூறினாராம்.

    கர்நாடகாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தமிழக பஞ்சாயத்தை பேச இப்போது அமித்ஷா ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. ஆட்சியில் தன்னை இ.பி.எஸ்.ஓரங்கட்டி விட்டார் என்றும், இப்படியே விட்டால் கட்சியிலும் தன்னை இ.பி.எஸ்.தரப்பினர் ஓரங்கடிவிடுவர் எனவும் ஓ.பி.எஸ். வருத்தப்பட்டுள்ளார்.

    ஆகையால், துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சியை முழுவதுமாக கையில் எடுத்து பார்த்துக் கொள்கிறேன் என தனது விருப்பத்தை அமித்ஷாவிடம் கூறியுள்ளார்.

    ஆனால் தற்போதைக்கு எந்த முடிவும் வேண்டாம் என அண்ணனிடம் அமித்ஷா கூறியதாக கூறுகிறார் ஓ.பி.எஸ்.ஆதரவு முக்கிய நிர்வாகி ஒருவர். ஆக, கர்நாடக விவகாரம் முடிந்த பின்னர் தமிழக பஞ்சாயத்தை பாஜக கையில் எடுக்கும் சாத்தியக் கூறுகள் இருப்பதை மறுக்க முடியாது.

    English summary
    Deputy CM O Panneerselvam met Union Home Minister Amit Shah in Delhi yesterday and discussed about various issues.5
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X