ஆப்டிகல் இல்யூஷன்: 'இங்கே ஒரு பூனை இருக்கு'.. உங்க கண்ணுக்கு தெரிகிறதா?.. கண்டுபிடிப்பது கஷ்டம்
டெல்லி: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சவால் மிகுந்த ஆப்டிகல் மாயை படத்தில் 'கிட்டி' என்ற பெயர் கொண்ட பூனை மறைந்துள்ளது. இந்த பூனையை 7 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க உண்மையில் கிரேட் தான்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அறிவுக்கு வேலை கொடுக்கும் என்றும் மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்கும் என்றும் சொல்லலாம்.
தற்போது இணையத்தில் ஒளியியல் மாயை என்று சொல்லப்படுகின்ற ஆப்டிகல் இல்யூன் படங்கள் அதிகளவில் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

அறிவுக்கு வேலை கொடுக்கும்
பார்ப்பவர்களின் கண்களை குழப்பி அறிவுக்கு வேலை கொடுக்கும் இது போன்ற படங்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன. ஒரு சிலர் அலுவலக நேரங்களை தவிர்த்து பிற நேரங்களில் இது போன்ற சுவாரசிய ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்த்து அதற்கான விடையை கண்டுபிடிக்க ஆர்வம் காட்டுவர்.. ஒரு சிலர் இதில் உள்ள விடையை கண்டுபிடித்து விட்டால் அதனை தனது நண்பர்கள் அல்லது குடும்பத்தினரால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று சோதித்து பார்க்க அவர்களுக்கும் அனுப்பி அவர்களது அறிவுத்திறனை சோதித்து பார்ப்பர்.

சவால் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படம்
ஒருசில ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விஷயங்களை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி இருக்கும். இது போன்ற படங்கள் மூளையை கசக்கி பிழிந்து யோசிக்க வைக்கும். அப்படி ஒரு சவால் மிகுந்த ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒன்று தான் தற்போது இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு பரவி வருகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பூனையை அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாதாம்...

7 செகண்ட் டைம்
அப்படி கண்டுபிடிப்பவர்கள் கழுகுக்கண் பார்வை கொண்டவர்களாக தான் இருப்பார்கள் என்றும் கூறுகிறார்கள்... சரி அந்த படத்தை இப்போது பார்ப்போம்... இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூனை ஒன்று மறைந்துள்ளது. அந்த பூனையின் பெயர் 'கிட்டி'யாம்.. கிட்டி இந்த படத்தில் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதுதான் இன்றைய சவால்... அதுவும் 7 செகண்ட் தான் டைம்... அதற்குள் பூனையை கண்டுபிடித்தாக வேண்டும். சரி.. டைம் ஸ்டார்ட்..

பூனையை பார்த்தீர்களா
7 செகண்டுக்குள் பூனையை கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்கள் கிரேட் தான்.. 7 செகண்டுக்குள் கண்டுபிடிக்க முடியாதவர்கள் மேலும் சில வினாடிகள் டைம் எடுத்துக்கொண்டு மீண்டும் முயற்சித்து பாருங்கள்.. இப்போது கண்டுபிடித்தாலும் கிரேட் தான்.. ஏனென்றால் இந்த படத்தில் மறைந்திருக்கும் பூனையை கண்டுபிடிப்பது சற்று சவால் மிக்கது தான்... சரி இப்பவும் பூனையை கண்டுபிடிக்காதவர்களுக்கு ஒரு டிப்ஸ்.. பூனை படத்தில் உள்ள பாறை அருகில் தான் இருக்கிறது.

இங்கே தான் இருக்கிறது
அங்கு மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி பாருங்கள் பூனையை எளிதில் கண்டுபிடித்து விடலாம்..
சரி இப்போதும் எங்க கண்ணுக்கு தெரியலையே என்று சொல்பவர்களுக்கு 2-வதாக ஒரு டிப்ஸ்.... பூனை வெள்ளை நிறத்தில் இருக்கிறது என்று நினைத்தால் கிடைக்காது.. மணல் நிறத்திலேயே பூனையும் இருக்கிறது... இப்போது பாறை அருகில் மணல் நிறத்தில் இருக்கிற பூனை உங்கள் கண்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறோம்.. அப்படி ஒன்றும் தெரியவில்லை என்று நினைப்பவர்களுக்கு மேல் உள்ள படத்தில் பூனை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
-
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications