தவெக அமைச்சரவையில் விசிக.. வன்னி அரசு அமைச்சராகிறார்.. திருமாவளவன் அறிவிப்பு
சென்னை: தவெக தலைமையிலான அமைச்சரவையில் விசிகவும் பங்கு பெறுவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். அமைச்சரவை பதவிக்காக வன்னியரசு பெயரை பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய யூனியூன் முஸ்லீம் லீக் கட்சியை தொடர்ந்து தவெக அமைச்சரவையில் விசிகவும் இணைகிறது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவையில் விசிக பங்கேற்கும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் எடுத்த முடிவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் வன்னியரசு அமைச்சரவையில் இடம் பெறுவார் எனவும் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

முஸ்லீம் லீக், விசிக முடிவு
தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக வென்றது. 108 இடங்கள் மட்டுமே கிடைத்ததால், ஆட்சி அமைக்க திமுக கூட்டணி கட்சியின் ஆதரவை தவெக நாடியது. திமுக கூட்டணியில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்ற காங்கிரஸ் முதல் கட்சியாக அக்கூட்டணியை கைகழுவிவிட்டு தவெகவுடன் கை கோர்த்தது.
இதையடுத்து, கம்யூனிஸ்ட்கள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக அறிவித்தன. எனினும், அமைச்சரவையில் விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற வேண்டும் என்பது முதல்வர் விஜய்யின் விருப்பமாக இருந்தது. இது குறித்த தனது விருப்பத்தை விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளிடம் விஜய் கூறியிருந்தார்.
வன்னியரசு அமைச்சர் ஆகிறார் - திருமாவளவன்
நேற்று தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளிப்படையாகவே இந்த அழைப்பை விடுத்தார். இதையடுத்து, கட்சியின் தேசிய தலைமையிடம் ஆலோசித்துவிட்டு சொல்வதாக கூறிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தவெக அமைச்சரவையில் இடம் பெற சம்மதம் தெரிவித்தது. பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ ஷாஜஹான் அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், விசிக என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்தது.
விசிகவின் நிலைப்பாட்டை மொத்த தமிழகமும் உற்று நோக்கிய நிலையில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து அறிவிப்பதாக திருமாவளவன் கூறினார். இதன்படி கட்சியினருடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தவெக அமைச்சரவையில் விசிக இடம் பெறும் என்றார். வன்னியரசு, தமிழக அமைச்சரவையில் இடம் பெறுவார் என்றும் கூறினார்.
உறுதிப்படுத்திய ஆளுநர் அர்லேகர்
வன்னியரசுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்று வெற்றி பெற்ற காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம் பெறுவது தமிழக அரசியல் வட்டரத்திலும் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் ஏற்கனவே வெளியேறிய நிலையில், இதர கூட்டணிகட்சிகளும் தவெகவை நோக்கி நகர்ந்து வந்துள்ளதற்கான அறிகுறியாகவே இது பார்க்கப்படுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
-
காலரில் என்னங்க இது.. அமைச்சரானதும் வன்னியரசும் இப்படி இறங்கிட்டாரே.. விசிகவிற்கு இது புதுசு -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
"பாடினதுக்கு கைது பண்ணுறாங்கய்யா!" அமைச்சர் வன்னி அரசுவிடம் பாடகர் வேடன் வேதனை.. பின்னணி சம்பவம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications