"செந்தில் பாலாஜியை கைது செய்வது எங்கள் நோக்கமல்ல.." உச்ச நீதிமன்றத்தில் அமலாக்க துறை சொன்ன பாயிண்டு
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் இன்று டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜு, தமிழக அரசு சார்பில் ஆஜரான கபில் சிபல் ஆகியோர் இன்றைய தினம் பல முக்கிய வாதங்களை முன்வைத்தனர். அப்போது ஒரு கட்டத்தில் செந்தில் பாலாஜியை கைது செய்வது எங்கள் நோக்கமில்லை என்றும் அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டாஸ்மாக்கில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகச் சொல்லிக் கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டு சில நாட்கள் வரை தொடர்ந்தது. இந்தச் சோதனை அப்போது தமிழகம் முழுக்க பரபரப்பைக் கிளப்பியது. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணை
இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இன்றைய தினம் அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜு, தமிழக அரசு சார்பில் ஆஜரான கபில் சிபல் ஆகியோர் இன்றைய தினம் பல முக்கிய வாதங்களை முன்வைத்தனர். காலையில் வழக்கு விசாரணை நடந்த நிலையில், மதிய இடைவெளிக்குப் பிறகும் வாதங்கள் தொடர்ந்தன.
அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான ராஜு, சோதனை மேற்கொள்ள அமலாக்கத் துறை அதிகாரிகளின் சட்ட விதிமுறைகள் குறித்து பல்வேறு கருத்துகளை அவர் முன்வைத்தார். அப்போது, இசிஐஆர் எனப்படும் தகவல் குறிப்பில் செந்தில் பாலாஜி பெயர் இடம் பெற்று இருப்பதாகத் தலைமை நீதிபதி கவாய் குறிப்பிட்டார். மேலும், இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளாரா என்றும் கேள்வி எழுப்பினர்.
செந்தில் பாலாஜி
அதற்குப் பதிலளித்த அமலாக்கத் துறை வழக்கறிஞர், "இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி கைது செய்யப்படவில்லை. அதேநேரம் வேறு ஒரு வழக்கு விசாரணையில், பணம் பெற்றதாக அவர் கைது செய்யப்பட்டார். அதேநேரம் இந்த விவகாரத்தில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகச் சில ஆவணங்களில் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே இசிஐஆர் எனப்படும் தகவல் குறிப்பில் சேர்க்கப்பட்டது. அதேநேரம் இந்த வழக்கில் இப்போது அவரை கைது செய்யும் நோக்கமில்லை" என்று கூறினார்.
பரபர வாதம்
ராஜு மேலும், "ஏற்கனவே மாநில அரசு 47 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. ஆனாலும், ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பதால் அதை அமலாக்கத்துறை விசாரிக்கலாம் . பெரிய அளவிலான முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளன. நாங்கள் பணமோசடி குறித்து மட்டுமே விசாரிக்கிறோம்" என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி கவாய், "இங்குக் கூட்டாட்சி என்ன ஆனது? அமலாக்கத் துறை செயல்பாடுகள் மாநில அரசின் விசாரணை உரிமைகளைப் பறிக்கும் வகையில் இருக்கிறதே... உங்களுக்குச் சந்தேகம் வரும் போதெல்லாம் மாநில அரசு முறையாக விசாரிக்கவில்லை என்று நினைத்த நீங்கள் நேரடியாக விசாரிப்பீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
இடைக்காலத் தடை
இப்படி இன்று நாள் முழுக்க இரு தரப்பும் பல்வேறு வாதங்களை முன்வைத்தது. முன்னதாக இந்த விவகாரத்தை அமலாக்கத் துறை விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், அதை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications