கொரோனாவால் 4 லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்... உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்..!
டெல்லி: கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
அமெரிக்கா, பிரேஸில் நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் 10 நாடுகளில் மட்டும் கொரோனாவால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதோடு அந்நாட்டில் இதுவரை 6 லட்சம் பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள பிரேஸிலில் 5 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்த இரு நாடுகளுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.
இதேபோல் மெக்சிகோவில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேரும், பெருவில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக ரஷ்யா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், கொலம்பியா, உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

உலகின் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை, ஒரு மில்லியன் மக்கள்தொகை என்ற அடிப்படையில் எனக் கணக்கிடும் போது குறைவாக கருதப்படுகிறது. 10 லட்சம் பேரும் 287 என்ற வீதத்தில் தான் இங்கு உயிரிழப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதேவேளையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 1000 முதல் 2000 வரை உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications