40 பேருக்கு டெல்டா+ கொரோனா.. தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. வார்னிங் அனுப்பிய மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் கவலைக்குரிய கொரோனா வகையாக அறிவிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு, நாடு முழுவதும் சுமார் 40க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை இப்போது மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது.
இந்தச் சூழலில் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா நாட்டில் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இது மூன்றாம் அலையை ஏற்படுத்தும் ஆபத்தும் உள்ளது.

40 பேர்
இந்நிலையில் நாடு முழுவதும் சுமார் 40 கொரோனா நோயாளிகளுக்கு உருமாறிய டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் 21 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 6 பேருக்கும், கேரளா & தமிழ்நாட்டில் 3 பேருக்கும் டெல்டா பிளஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல கர்நாடகாவில் இரண்டு பேருக்கும் பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், காஷ்மீரில் தலா ஒருவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

டெல்டா பிளஸ் கொரோனா
இந்த டெல்டா பிளஸ் கொரோனா வகையை மத்திய அரசு கவலைக்குரிய கொரோனா வகையாக அறிவித்துள்ளது. மேலும், மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களுக்கு மட்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும்கூட அனைத்து மாநிலங்களும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாநிலங்களுக்கு எச்சரிக்கை
இதுவரை இந்தியாவில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், பல்வேறு மாநிலங்களும் தங்கள் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை வாபஸ் பெற்று வருவதால் டெல்டா பிளஸ் பாதிப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் மக்கள் ஒரே இடத்தில் அதிகமாக ஒன்றுகூடுவதைத் தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விகே பால்
இது குறித்து தடுப்பூசி வல்லுநர் குழு தலைவர் வி கே பால் கூறுகையில், "அனைத்து மாநிலங்களுக்கும் இது குறித்து வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளோம். ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்கள் தான். இருந்தாலும் அதனை அதிக கவனத்துடன் முறையாகச் செயல்படுத்த வேண்டும். இந்த டெல்டா பிளஸ் கொரோனா வகை புதிய தலைவலியை ஏற்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை" என்றார்.

9 நாடுகள்
இந்த டெல்டா பிளஸ் கொரோனா வகை அமெரிக்கா பிரிட்டன், உட்பட இதுவரை 9 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது டெல்டா வகை கொரோனாவை போலத் தான் என்றாலும் கொரோனா வைரசின் வெளியில் இருக்கும் புரத ஸ்பைக்கில் கூடுதல் மாற்றமடைந்துள்ளது. இந்த புதிய வகை வேகமாகப் பரவுமா, தீவிர பாதிப்பை அதிகப்படுத்துமா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை. இது குறித்துக் கூடுதல் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications