செம ஷாக்.. இந்தாண்டு ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளில்.. 93% கடைசி 3 மாதங்களில் ஏற்பட்டவை
டெல்லி: இந்தியாவில் இந்த ஆண்டு ஏற்பட்ட ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்புகளில், சுமார் 93% கடைசி 3 மாதங்களில் ஏற்பட்டவையாகும்.
Recommended Video
இந்தியாவில் தற்போது கொரோனா வைரசின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைரஸ் பாதிப்பின் தீவிர தன்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 2.74 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த எண்ணிக்கை 1.48 லட்சமாக இருந்தது. அதாவது இந்த ஆண்டு மட்டும் கொரோனாவால் இந்தியாவில் சுமார் 1.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்,
அதிலும் குறிப்பாகக் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மட்டும் 1.17 லட்சம் பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இது 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளில் 93%ஆகும். ஒட்டுமொத்தமாக பெருந்தொற்று தொடங்கியது முதல் பதிவான கொரோனா உயிரிழப்புகளில், இது 42.72% ஆகும்.
மே மாதத்தில் வெறும் 17 நாட்களிலேயே 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 44% அதிகமாகும்.
கொரோனா பாதிப்பைப் பொறுத்தவரை இந்த ஆண்டு தொடக்கத்தில் 1.02 கோடி பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போதஒட்டுமொத்தமாக வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.49 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது இந்த ஆண்டில் வைரஸ் பாதிப்பு 143% அதிகரித்துள்ளது.
இருப்பினும், தற்போது நாட்டில் கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.நேற்று மட்டும் இந்தியாவில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. கடந்த ஏப்ரல் 21ஆம் தேதிக்குப் பிறகு, நாட்டில் கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்திற்கும் கீழ் குறைவது இதுவே முதல்முறையாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications