ஓவைசியின் உடலில் ஜின்னாவின் டிஎன்ஏ.. கொளுத்தி போட்ட மத்திய அமைச்சர்.. என்ன இப்படி சொல்றாரே!
டெல்லி: டெல்லி ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் கருத்து தெரிவித்த ஓவைசியை, பாஜக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். ‛‛ஓவைசியின் உடலில் ஜின்னாவின் டிஎன்ஏ உள்ளது. இதனால் தான் அனைத்து பிரச்சனைகளையும் இந்து-முஸ்லிம்கள் இடையே நடப்பது போன்று அவர் பார்க்கிறார்'' என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஜஹாங்கிர் புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தின் போது இருதரப்பு மக்கள் இடையே மோதல் உருவானது. இது வன்முறையாக மாறியது.
இதனால் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீஸார் உட்பட பலர் காயமடைந்தனர். இதுதொடர்பாக இருதரப்பிலும் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆக்கிரமிப்பு அகற்றம்
இந்நிலையில் தான் ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற டெல்லி வடக்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. நேற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சில கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது. இதற்கிடையே டெல்லி உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றுவது நிறுத்தம் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு இன்றும் விசாரணைக்கு வர உள்ளது.

ஓவைசி கண்டனம், நேரில் ஆய்வு
முன்னதாக ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு அசாதுதின் ஓவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛!ஏழைகளுக்கு எதிராக பாஜக போர் தொடுத்துள்ளது. ஆக்கிரமிப்பு என்ற பெயரில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசத்தை போன்று டெல்லியில் வீடுகளை இடிக்க போகிறது. உயிருடன் இருக்க துணிந்த ஏழை முஸ்லிம்களை வெறுமனே தண்டிக்கும் செயல் இதுவாகும்.இந்த செயலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலில் தனது பாத்திரத்தை தெளிவுப்படுத்த வேண்டும். இத்தகைய துரோகங்களுக்கும், கோழைத்தனத்துக்காகவா ஜாஹிங்கிர்புரி மக்கள் அவருக்கு வாக்களித்தனர்?'' என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் நேற்று இரவு ஜஹாங்கிர்புரி பகுதிக்கு அவர் சென்று பொதுமக்களிடம் விசாரித்தார்.

இந்து முஸ்லிம் என பிரித்து...
இந்நிலையில் தான் ஓவைசியை மத்திய அமைச்சரும், சர்ச்சைக்கு பெயர் பெற்றவருமான கிரிராஜ் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். ‛‛டெல்லி ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து எக்கு முழுவிபரம் தெரியவில்லை. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் சட்டத்தின்படி செயல்படும் என நம்புகிறேன். ஓவைசி போன்றவர்கள் அனைத்து பிரச்சனைகளையும் இந்து-முஸ்லிம் என பிரித்து பார்க்கின்றனர். உடலில் ஜின்னாவின் டிஎன்ஏ இருப்பதாலும் இஸ்லாமிய சட்டங்களை மட்டும் நம்புவதாலும் தான் இதை செய்கின்றனர்'' என்றார்.

ராமர் என்பவர் யார்
இந்த வேளையில் பீகாரில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஜிதன் ராம் மஞ்சியின் ராமர் குறித்த கருத்து பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "இது சுதந்திர நாடு. அனைவருக்கும் தாங்கள் விரும்புவதை பேச சுதந்திரம் உள்ளது. நாங்கள் ராமரின் பக்தர்கள். ராமர் குறித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கி ராமர்கோவில் கட்ட அனுமதி அளித்துள்ளது'' என கூறினார். அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜிதன் ராம் மஞ்சி பேசுகையில், ‛‛ராமர் கடவுள் கிடையாது. அவர் ஒரு கற்பனை கதாபாத்திரம்'' என தெரிவித்து இருந்தார். இதற்கு தான் தற்போது கிரிராஜ் சிங் பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications