Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கண்ணுக்கு தெரியாத மையில் பேய்கள் எழுதியதை ராஜ்நாத் சிங் படித்தாரா?" விளாசிய ப.சிதம்பரம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கண்ணுக்குத் தெரியாத மையில் பேய்கள் எழுதிய ஆவணத்தை ராஜ்நாத் சிங் படித்தாரா? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நிறைவடைந்தது. நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நாடு முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

P chidambaram asks that Was Rajnath Singh read a document written by ghosts in invisible ink

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, "நாட்டில் உள்ள பெண்களின் தங்கத்தை எடுத்து நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று கூறினார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா?" என்று பேசினார் மோடி.

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திலும், காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசிய பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்வினை ஆற்றி வரும் நிலையில்,பிரதமர் மோடிக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மோடி சொன்னதை ஆமோதித்துப் பேசினார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கிரேட்டர் நொய்டாவில் வாக்கு சேகரித்தபோது பேசுகையில், "எனக்கு பிரதமரை நீண்ட நாட்களாக தெரியும். அவருடன் எனக்கு நீண்ட காலம் நல்ல தொடர்பு இருந்து வருகிறது. அவர் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என மதத்தின் பேரில் எப்போதும் அரசியல் செய்ததே இல்லை. நமது பிரதமர் சமூகத்தை பிளவுபடுத்த ஒருபோதும் நினைத்தது இல்லை.

மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக இருந்தார். நான் இன்றும் அவரை மதிக்கிறேன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த 2006 டிசம்பர் 9 ஆம் தேதி பேசிய டாக்டர் மன்மோகன் சிங், நாட்டின் வளங்களில் யாருக்கேனும் முன்னுரிமை இருப்பின், அது சிறுபான்மையினருக்குத்தான், குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு தான் என்று கூறியிருந்தார்" என்று பேசினார்.

இந்நிலையில் ராஜ்நாத் சிங்கின் பேச்சு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் சொல்வது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. காங்கிரஸ் கட்சி, மக்களின் சொத்துகளைக் கைப்பற்றி, ஊடுருவல்காரர்களுக்கு தரும் என தேர்தல் அறிக்கையில் எந்த பக்கத்தில் உள்ளது?

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் எந்தப் பக்கத்தில் நீங்கள் அதை படித்தீர்கள்? கண்ணுக்குத் தெரியாத மையில் பூதங்கள் எழுதிய ஆவணத்தை ராஜ்நாத் சிங் படித்தாரா? இதுபோன்ற அப்பட்டமான பொய்களைக் கூறி பாதுகாப்புத் துறை அமைச்சர் தனது கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக் கூடாது" என்று தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.

மேலும், "மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏழைகள், நடுத்தர மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மதசார்பற்ற காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான நீதியை வழங்க உறுதிபூண்டுள்ளது. சொத்துகள் மற்றும் வரி தொடர்பான அண்மை பேச்சுகள் பாஜகவை பயம் தொற்றிக்கொண்டதைக் காட்டுகிறது" என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+