விட்டால் ஒரு மாதம் கூட கேட்பீர்கள்.. ப.சி வழக்கில் நீதிபதி கடும் பாய்ச்சல்.. அதிர்ந்து போன சிபிஐ!
Recommended Video
டெல்லி: விட்டால் ப. சிதம்பரத்தை மாதக்கணக்கில் கூட காவலில் எடுத்து விசாரிப்பீர்கள் என்று சிபிஐ அமைப்பை நீதிபதி கண்டித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு திங்கள் கிழமை வரை காவலை நீட்டிப்பதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதி அஜய்குமார் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இந்த வழக்கில் சிபிஐ சார்பாக துணை சொலிஸ்டர் ஜெனரல் நடராஜ் வாதம் செய்தார். ப.சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன்வாதம் செய்தார்.
துணை சொலிஸ்டர் ஜெனரல் நடராஜ்: சிதம்பரத்தை கூடுதலாக 5 நாட்கள் விசாரிக்க வேண்டும்.
நீதிபதி அஜய்குமார்: நீங்கள் ஏன் தொடக்கத்திலேயே 15 நாட்கள் கேட்டிருக்க கூடாது.
துணை சொலிஸ்டர் ஜெனரல் நடராஜ்: வழக்கில் சில விஷயங்கள் இன்னும் தெளிவில்லாமல் உள்ளது. அதனால் ப. சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும்.
நீதிபதி அஜய்குமார்: இப்படியே போனால் நீங்கள் பல மாதங்கள் கூட காவல் கேட்பீர்கள்.காவல் நீட்டிப்பிற்கு வலுவான காரணம் இல்லை.
ப. சிதம்பரம் தரப்பு மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன்: திங்கள் வரை ப. சிதம்பரம் காவலில் இருப்பதில் பிரச்சனை இல்லை.சிபிஐ காவலுக்கு எதிராக விசாரணை திங்கள் கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது அதுவரை ப. சிதம்பரம் காவலில் இருப்பதில் பிரச்சனை இல்லை.ஆனால் சிபிஐ காவல் என்பது முறையற்றதுதான்.
நீதிபதி அஜய்குமார்: ப. சிதம்பரத்திடம் மொத்தம் எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டது.?
ப. சிதம்பரம்: என்னிடம் 55 மணி நேரம் கேள்வி கேட்டனர். 400 கேள்விகள் கேட்டனர், எல்லாம் ஒரே மாதிரியான கேள்விகள்தான்.
நீதிபதி அஜய்குமார்: சிபிஐயின் 5 நாட்கள் காவல் கோரிக்கையை ஏற்க முடியாது. ப. சிதம்பரம் தரப்பு வைத்த கோரிக்கையின் அடிப்படையில் திங்கள் வரை காவலை நீட்டிக்கிறேன், என்று குறிப்பிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications