நான் அங்குதான் இருந்தேன்.. 24 மணி நேரம் எங்கே சென்றார் ப. சிதம்பரம்?.. வெளியான ரகசியம்!
நேற்று முதல்நாள் மாலையில் இருந்து நேற்று மாலை வரை முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எங்கே சென்றார் என்பதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.
Recommended Video
டெல்லி: நேற்று முதல்நாள் மாலையில் இருந்து நேற்று மாலை வரை முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எங்கே சென்றார் என்பதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். சிபிஐ அதிகாரிகளால் 40 பேர் அவரின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து கைது செய்தனர்.
இந்த நிலையில் இன்று ப. சிதம்பரத்தை சிபிஐ காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளது. சிபிஐ பெரிய தேடுதல் வேட்டைக்கு பின் அவரை நேற்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

எங்கே சென்றார்
ஆம் நேற்று முதல்நாள் மாலை 6.30 மணியில் இருந்து நேற்று மாலை 7 மணி வரை ப. சிதம்பரம் எங்கே சென்றார் என்று யாருக்குமே தெரியாது. சிபிஐ அதிகாரிகளுக்கு கூட அவர் எங்கே இருந்தார் என்று தெரியவில்லை. 24 மணி நேரமாக அதிகாரிகள் அவரை தேடியும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

என்ன சந்தேகம்
இந்த நிலையில் பலரின் சந்தேகங்களுக்கு நேற்று ப. சிதம்பரமே விளக்கம் அளித்துள்ளார். நேரடியாக விளக்கம் அளிக்காமல் தான் எங்கே இருந்தேன் என்பதை மட்டும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று ப. சிதம்பரம் அளித்த பேட்டியில், நான் சட்டத்தில் இருந்து தப்பி செல்லவில்லை. ஆனால் என் மீது தவறாக புகார் கூறினார்கள்.

என்ன விளக்கம்
எனக்கு டெல்லி ஹைகோர்ட்டில் முன் ஜாமீன் வழங்கப்படவில்லை. இதனால் நான் சுப்ரீம் கோர்ட் சென்றேன். ஆனால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டார்கள். இதனால் அவசர அவசரமாக நாங்கள் இரவு முழுக்க முன் ஜாமீன் மனுக்களை தயார் செய்தோம். நானும் எனது வக்கீல்கள் அணியும் இரவு முழுக்க தூங்காமல் மனுக்களை தயார் செய்தோம்.

எங்கு இருந்தார்
வக்கீல் வீட்டில்தான் மனுக்களை நாங்கள் தயார் செய்து கொண்டு இருந்தோம்.நான் எங்கும் ஓடவில்லை. நான் தலை நிமிர்ந்து நடந்து கொண்டு இருக்கிறேன். சுப்ரீம் கோர்ட் எங்கள் மனுவில் தவறு இருப்பதாக கூறியது. இதனால் காலையில் இருந்து அந்த மனுக்களை நாங்கள் தயார் செய்து பின் சரி செய்து கொண்டு இருந்தோம். இந்த பணிகளை அவசர அவசரமாக செய்தோம், என்று குறிப்பிட்டுள்ளார்.

என்ன உறுதி
ப. சிதம்பரம் அளித்த இந்த பேட்டி மூலம் அவர் காணாமல் போய் இருந்த 24 மணி நேரமும் தன்னுடைய வழக்கறிஞர் வீட்டில்தான் தங்கி இருந்தார் என்பது உறுதியாகிறது. அங்குதான் அவர் முன் ஜாமீன் தொடர்பான மனுவை தயார் செய்து கொண்டு இருந்தார் என்பது உறுதியாகி உள்ளது.

உதவும்
இந்த நிலையில் இதே விளக்கத்தை இன்று ஜாமீன் கேட்கும் போது சிதம்பரம் பயன்படுத்த வாய்ப்புள்ளது. நான் ஓடி ஒளியவில்லை. வக்கீல் வீட்டில்தான் இருந்தேன். அதனால் எனக்கு பெயில் அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications