ஹைதராபாத் மருத்துவர் கொலை.. அதிர்ச்சி அளிக்கிறது.. பிரஸ் மீட்டிலேயே உணர்ச்சி வசப்பட்ட ப.சி.. வீடியோ
Recommended Video
டெல்லி: ஹைதராபாத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு நான் அதிர்ச்சி அடைந்தேன், நாடு முழுக்க பல இடங்களில் மொத்தமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.
இன்று டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். பொருளாதார மந்த நிலை, ஜேஎன்யு பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை என்று பல விஷயங்கள் குறித்து இவர் பேட்டி அளித்தார். மத்திய அரசுக்கு எதிராக இவர் கடுமையாக விமர்சனம் வைத்தார்.
இந்த நிலையில் ப. சிதம்பரத்திடம் குழு கலவரம் குறித்தும், பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்படுவது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது. ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
|
என்ன பதில்
இதற்கு பதில் அளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் அவமானப்படுகிறேன். நேற்று ஒரே பத்திரிக்கையில் 6 வன்புணர்வு மற்றும் கூட்டு கலவரம் குறித்த செய்திகளை படித்தேன். (உணர்ச்சி வசப்படுகிறார், வார்த்தைகள் குளறுகிறது). ஒரே பேப்பரில் இத்தனை செய்திகள்.

என்ன அதிர்ச்சி
எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நாம் எங்கே செல்கிறோம். இதை எல்லாம் செய்துவிட்டு நாம் தப்பித்து சென்று விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களுக்கு எந்த அச்சமும் கிடையாது.

மோசமான அவமானம்
அவமானம். போலீஸ் என்ன செய்கிறது என்று தெரியவில்லை. சட்டம் என்ன செய்கிறது என்று தெரியவில்லை. நாடு முழுக்க பல இடங்களில் மொத்தமாக சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது. அரசு என்னதான் செய்கிறது,.

அரசு ஏன்?
அரசு ஏன் இதை எல்லாம் தொடர்ந்து வேடிக்கை பார்க்கிறது. இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசு இதுவரை எதுவுமே செய்யவில்லை, என்று ப. சிதம்பரம் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications