ஜாமீன் கிடைத்தாலும் மீண்டும் கைது.. ப.சிக்கு அமலாக்கத்துறை செக்.. அமித் ஷாவின் மாஸ்டர் பிளான்!
இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கினாலும் கூட அவர் மீண்டும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
Recommended Video
டெல்லி: இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கினாலும் கூட அவர் மீண்டும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு இத்தனை நாட்கள் ப. சிதம்பரம் தலை மீது கத்தி போல தொங்கிக் கொண்டு இருந்தது. தற்போது அந்த வழக்கு உச்ச கட்ட பரபரப்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு இந்த வழக்கில் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். நள்ளிரவில் அவரின் வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் சுவர் எகிறி குதித்து அவரை கைது செய்தனர்.

என்ன நடக்கும் இனி
இந்த நிலையில் இன்று மதியம் இரண்டு மணிக்கு டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்படுகிறார். ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில்தான் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு நடைபெற்று வருகிறது. இன்று மதியம் இரண்டு மணிக்கு இந்த வழக்கில் விசாரணை நடக்க உள்ளது.

என்ன முடிவு
ப. சிதம்பரத்தை சிபிஐ 10 -14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளது என்கிறார்கள். காவலில் எடுத்து விசாரித்தால்தான் இந்த வழக்கில் ஒரு தெளிவு பிறக்கும். ப. சிதம்பரம் மீது இந்த முறைகேட்டில் நேரடியாக குற்றச்சாட்டு இல்லை. அதனால் அவரை விசாரித்தால்தான் இந்த முறைகேட்டில் அவரின் பங்கு தெரியும் என்று சிபிஐ நினைக்கிறது.

விசாரணை
ஆனால் அதே சமயம் ப. சிதம்பரம் தரப்பு இன்று ஜாமீன் கோர முடிவு செய்துள்ளது. ப. சிதம்பரம் பெயர் எப்ஐஆரில் இல்லை அதேபோல் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் அவருக்கு பெயில் வழங்க வேண்டும் என்று சிதம்பரம் தரப்பு கோரிக்கை வைக்க உள்ளது.

என்ன வாய்ப்பு
பெரும்பாலும் இன்று ப. சிதம்பரத்திற்கு டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜாமீன் வழங்கிய பின்பும் கூட அவருக்கு செக் வைக்க அமித் ஷா அன் கோ திட்டமிட்டுள்ளது என்கிறார்கள். ஆம், தற்போது ப. சிதம்பரத்தை சிபிஐதான் கைது செய்துள்ளது. அமலாக்கத்துறை அவரை கைது செய்யவில்லை.

கைது
இதனால் இன்று மதியம் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்தால் அவர் வெளியே வந்தவுடன் அமலாக்கத்துறை மூலம் மீண்டும் கைது செய்யப்படுவார் , அவர் இந்த முறை அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார் என்று கூறுகிறார்கள். இதனால் மீண்டும் ப. சிதம்பரம் ஜாமீன் தேடி அழைய வேண்டிய நிலை உருவாகும் என்று கூறுகிறார்கள்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications