திகார் சிறையில் முதல் நாள்.. சரியா தூக்கம் வரலை.. புரண்டு புரண்டு படுத்து தவித்த ப.சிதம்பரம்
Recommended Video
டெல்லி: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படாததால் தூக்கமில்லாமல் இரவு அவதிக்குள்ளானதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை செய்ய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு மீது நேற்று மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிபிஐ கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஷைனி, சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

கோரிக்கை
பின்னர் அவர் திகார் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் 19-ஆம் தேதி வரை இருப்பார். இந்த நிலையில் தனக்கு தனி அறை, மேற்கத்திய கழிப்பறை, தனி கட்டில், மெத்தை ஆகியவற்றை கேட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

சிதம்பரம்
இதையடுத்து சிறையில் பொருளாதார குற்றவாளிகளை அடைக்கும் பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 7-ஆம் எண் கொண்ட அறை ஒதுக்கப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பை அனுபவித்து வந்த சிதம்பரத்துக்கு சிறப்பு வசதிகள் ஏதும் வழங்கப்படவில்லை.

சிறை நிர்வாகம்
அவர் சிறையில் உலவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறைக்கு தனது மூக்குக் கண்ணாடியையும் மருந்துகளை எடுத்துச் செல்ல சிதம்பரம் விரும்பியதை அடுத்து அவற்றை கொண்டு வர சிறை நிர்வாகம் அனுமதித்தது.

தலையணை
அவரது அறைக்கே அன்றாட பத்திரிகைகள் வரும். சிறை நூலகத்தையும் டிவியையும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அறை வழக்கமான அறைதான். சிதம்பரத்துக்கு தலையணை, கம்பளி மட்டுமே வழங்கப்பட்டது.

திகார் சிறையில்
ஜாமீன் கிடைக்கும் என வெகுவாக நம்பியிருந்த சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நேற்று முதல் நாள் இரவு தூக்கமில்லாமல் தவித்தார். பின்னர் இன்று காலை 6 மணிக்கு அவருக்கு டீ, பிரட், உப்புமா, கஞ்சி ஆகியன வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சராக, இன்னாள் எம்பியாக பல்வேறு சலுகைகளை அனுபவித்து வந்த சிதம்பரம் திகார் சிறையில் தூக்கமில்லாமல் தவித்தது அவரது குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தியது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications