பன்றிக்கு லிப் ஸ்டிக்! பின்லேடனும் பாகிஸ்தான் ராணுவ தளபதியும் ஒன்றுதான்.. Ex அமெரிக்க அதிகாரி ஆவேசம்
டெல்லி: கடந்த செவ்வாய்க்கிழமை காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் மிக மோசமான தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. இதில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே இந்தத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானையும் அந்நாட்டு ராணுவத் தளபதி அசிம் முனீரையும் பென்டகன் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்றும் மைக்கேல் ரூபின் சாடியுள்ளார்.
காஷ்மீரில் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நேற்று முன்தினம், செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் மிக மோசமான தாக்குதலை நடத்தினர். அப்பாவி சுற்றுலாப் பயணிகளை அவர்கள் குறிவைத்துச் சுட்டுத் தள்ளினர். இந்தச் சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். ஒட்டுமொத்த நாட்டையும் இந்தச் சம்பவம் உலுக்குவதாக இருக்கிறது.

அசிம் முனீர்
இதற்கிடையே பென்டகன் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் பாகிஸ்தான் ராணுவம் குறித்தும் அந்நாட்டின் ராணுவத் தளபதி அசிம் முனீரை வெளுத்து வாங்கியுள்ளார். பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீரை மறைந்த அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட பென்டகன் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின், 26 பேரைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குப் பங்கு இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிகாரி
இது தொடர்பாக ரூபின் மேலும் கூறுகையில், "முனீருக்கும் பின்லேடனுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கிறது.. முனீர் ஒரு அரண்மனையில் வசிக்கிறார். பின் லேடன் ஒரு குகையில் வசித்து வந்தார். மற்றபடி இருவரும் ஒரே வேலையைத் தான் செய்கிறார்கள். பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானைப் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக அறிவிக்க வேண்டும். அசிம் முனீரை பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும். அதுவே பஹல்கான் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
பன்றிக்கு லிப் ஸ்டிக்
ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் ஏதோ தன்னிச்சையாக நடந்த விஷயம் எனச் சொல்லிச் சமாளிக்க முடியாது. அது பன்றிக்கு லிப் ஸ்டிக் போடுவது போல ஏற்க முடியாது சமாளிப்பு.. எப்போது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பதயும் நாம் பார்க்க வேண்டும். முன்பு இப்படித் தான், பில் கிளிண்டன் இந்தியா சென்றபோது பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. அதேபோல இப்போது துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்தியா சென்றுள்ள போது தாக்குதல் நடத்தியுள்ளனர். முக்கிய தலைவர்களின் பயணத்தின் போது கவனத்தைத் திசைதிருப்பவே பாகிஸ்தான் விரும்புவதாகத் தெரிகிறது" என்று வெளுத்து வாங்கினார்.
இந்தியா பதிலடி
பைசரன் புல்வெளியில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதற்கிடையே பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் விதமான இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக 1960ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும், எல்லை தாண்டிய தாக்குதல் என்பதால் அட்டாரி எல்லையை உடனடியாக மூடுவதாகவும் அறிவித்தார். மேலும், பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர்களின் எண்ணிக்கையைக் குறைக்கப்படும் என்று ன வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்திரி கூறினார்.
சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்குப் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், தற்போது இத்திட்டத்தில் இந்தியாவில் உள்ள எந்தவொரு பாகிஸ்தானியரும் 48 மணிநேரத்தில் வெளியேற வேண்டும் என வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்திரி அறிவித்தார். மேலும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வசிக்கும் பாதுகாப்பு, ராணுவம், கடற்படை மற்றும் விமான ஆலோசகர்கள் ஒரு வாரத்தில் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications