பஹல்காம் தாக்குதல் கோழைத்தனமானது.. பயங்கரவாதிகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்.. சூளுரைத்த மோடி
டெல்லி: பஹல்காம் தாக்குதல் கோழைத்தனமானது என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். மேலும் பயங்கரவாதிகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும். காஷ்மீரில் சகஜ நிலை திரும்ப பயங்கரவாதிகள் விரும்பவில்லை. பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான போராட்டத்துக்கு உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்று மோடி கூறினார்.
ஒவ்வொரு மாதமும் பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பேசி வருகிறார். அந்த வகையில் இன்று பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும் போது, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பற்றி பேசினார். மோடி பேசியதாவது:-

ஜம்மு காஷ்மீரில் நீண்ட நாட்களுக்கு பிறகு அமைதி திரும்பியது. மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால் ஜம்மு காஷ்மீர் அமைதியாக இருக்க பயங்கரவாதிகள் விரும்பவில்லை. சகஜ நிலைக்கு காஷ்மீர் திரும்புவதை விரும்பாத பயங்கரவாதிகள் பஹல்காமில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் காஷ்மீர் அமைதியாக இருக்க விரும்பவில்லை என்பதையும், காஷ்மீரை அழிக்க நினைப்பதையும் காட்டுகிறது. இந்த பயங்கரவாத தாக்குதல் என் மனதை உடைத்துவிட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்த என் சொந்தங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல் கோழைத்தனமானது. இது அவர்களது கோழைத்தனத்தை தான் காட்டுகிறது.
எனினும் இதற்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 140 கோடி மக்களும் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications