இந்திய விமானி மாயம்.. பாகிஸ்தான் துணை தூதருக்கு இந்தியா சம்மன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிறை வைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணை தூதருக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டியடிக்கும் முயற்சியில் இந்திய போர் விமானங்கள் ஈடுபட்டன. அப்போது நடைபெற்ற சண்டையின்போது பாகிஸ்தான் போர் விமானம் சுட்டதில் இந்தியாவின் மிக் ரக போர் விமானம் பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது.

இதையடுத்து அந்த விமானத்தின் விமானி அபிநந்தனை பாகிஸ்தான் சிறைவைத்துள்ளது. அவரை பத்திரமாக மீட்பது குறித்து இந்தியா ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணைத் தூதர் சையத் ஹைதர் ஷாவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து அவர் டெல்லி வந்துள்ளார்.


Click it and Unblock the Notifications
