ட்ரோன் அட்டாக்கை மீண்டும் தொடங்கிய பாக்! முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இரண்டாவது நாளாக இன்றும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்.

முப்படைகளின் தளபதிகள் மட்டுமல்லாது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

pakistan india Pakistan

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும், இந்திய விமானப்படையும் இணைந்து ஆபரேஷன் சிந்தூர்-ஐ மேற்கொண்டன. இந்த தாக்குதல் மூலம் இந்தியா சர்வதேச விதிகளை மீறியுள்ளதாக கூறி பாகிஸ்தான் சண்டைக்கு வந்திருக்கிறது. நேற்றிரவு ஜம்மு காஷ்மீர் தொடங்கி பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஷெல் மற்றும் ட்ரோன் தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டிருந்தது. இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்திருக்கிறது.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இந்த தாக்குதலை பாகிஸ்தான் தற்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. இதனையத்து பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது.

இந்த சூழலில்தான் பிரதமர் நரேந்திர மோடி, அஜித் தோவல், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். இந்த கூட்டத்தில் இந்தியா மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+