இந்திய ஏவுகணைத் தாக்குதலில் 12 தீவிரவாதிகள் பலி! 60 பேர் காயம்! மிரளும் பாகிஸ்தான்!
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த போது 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் 60 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் 9 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. அது போல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் நகரைச் சுற்றியுள்ள மலைகளுக்கு அருகில் உள்ள பகுதியில் நள்ளிரவுக்குப் பிறகு பலத்த வெடி சப்தங்கள் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.
பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் பல்வேறு விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.
இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணங்களில் உள்ள பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு ஏவுகணை காஷ்மீரில் உள்ள முசாபராபாத்தில் உள்ள பழைய விமான நிலையத்தை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவதத்தினர் கூறுகையில் இந்தியாவின் ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 60 பேர் காயமடைந்தனர் என பாகிஸ்தான் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் ராவல்பிண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிகிறது. தற்போது இந்த பதற்றமான சூழலையொட்டி பாகிஸ்தானில் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
தொலை தூரம் பயணிக்கும் வலிமையான ஏவுகணைகளை கொண்டு துல்லியமாக தாக்குதல் நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் அங்கிருந்த கட்டடங்கள் எல்லாம் தரைமட்டமாகின. இந்தியாவின் முப்படைகளும் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல் கிடைத்துள்ளது. மசூர் அஸாதின் மதரஸா முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதே வேளையில் பொதுமக்கள் இருக்கும் பகுதிகளிலோ பாகிஸ்தான் ராணுவ பகுதிகளிலோ இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தவில்லை.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications