வெறும் 30 நாள்தான்.. இந்தியாவிடம் வீம்பு காட்ட முடியாத பாகிஸ்தான்.. 'உயிர் காக்க' சரண்டர்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Watch Video : Pakistan PM Imran Khan said in Lahore that War is not a solution for anything

    டெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 வது பிரிவை இந்தியா நீக்கிய பின்னர், பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்துவதாக அறிவித்தது. ஆனால் அதன் நடவடிக்கை அந்த நாட்டுக்கே ஆபத்தாக மாறிவிட்டது.

    பாகிஸ்தானின் அணுகுமுறை தோல்வியில் சென்று முடிந்துவிட அதற்கு ஒரு மாதம் கூட தேவைப்படவில்லை என்பதுதான் உண்மையான நிலவரமாக உள்ளது.

    இந்தியாவிலிருந்து செல்லும் உயிர்காக்கும் மருந்துகள் இல்லாததால் பாகிஸ்தான் நோயாளிகள் மோசமான நிலையில் சிக்கியுள்ளனர்.

    இறங்கி வந்த பாகிஸ்தான்

    இறங்கி வந்த பாகிஸ்தான்

    நிலைமை மோசமானதை புரிந்து கொண்டு, பாகிஸ்தான் தற்போது, இந்தியாவுடனான வர்த்தகத்தை ஓரளவு தொடர முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இருந்து உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவுடனான வர்த்தகக்கத்தை தடை செய்த 30 நாட்களில், இந்த முடிவின் தாக்கத்தை பாகிஸ்தான் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளது.

    கடும் அடி

    கடும் அடி

    பாகிஸ்தான் அவசரப்பட்டு எடுத்த வர்த்தக நிறுத்த முடிவு என்பது, இந்தியாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, ஆனால் பாகிஸ்தானுக்கு பின்னந்தலையில் நச்சென்று அடி விழுந்ததை போல பெருத்த அடி விழுந்துள்ளது. அதுவும் உயிர் காக்கும் மருந்துகள் தடைபட்டால் என்னவாகும் என்பதை இப்போது பாகிஸ்தான் புரிந்து கொண்டு உள்ளது.

    உயிர் காக்கும் மருந்துகள்

    உயிர் காக்கும் மருந்துகள்

    கடந்த சில நாட்களாக, பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகளின் பற்றாக்குறை ஏற்பட தொடங்கியது. மருந்துகள் இல்லாததால் நோயாளிகள் கஷ்டப்படத் தொடங்கினர். பாகிஸ்தான் இதன்பிறகுதான் தவறை உணர்ந்துள்ளது. உதவிக்கு வழியற்ற பாகிஸ்தான் இப்போது இந்தியாவில் இருந்து மருந்துகளை வாங்க அனுமதி அளித்துள்ளது.

    ஒப்புதல்

    ஒப்புதல்

    நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக இந்தியாவில் இருந்து உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று பாகிஸ்தான் செய்தி சேனல்கள் ஜியோ டிவி மற்றும் துனியா டிவி மேற்கோளிட்டுள்ளன. பாகிஸ்தானின் வர்த்தக அமைச்சகம் சட்டரீதியான ஒழுங்குமுறை உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்கீழ் மருந்துகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய மூலப்பொருள்

    இந்திய மூலப்பொருள்

    பாகிஸ்தான் தயாரிக்கும், மருந்துகளின் மூலப்பொருட்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. பாகிஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி கூட்டமைப்பின் படி, பாகிஸ்தான் மருந்து நிறுவனங்கள், தங்கள் உற்பத்திக்காக இந்தியா மற்றும் சீனாவிலிருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்கின்றன. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் பெரும் பகுதி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்று எஃப்.பி.சி.சி.ஐயின் மருந்துக் குழுவின் தலைவர் குவாஜா ஷாஜெப் அக்ரம் தெரிவித்துள்ளார்.

    பழங்களும் நஷ்டம்

    பழங்களும் நஷ்டம்

    சர்க்கரை, தேநீர், உயிர் காக்கும் மருந்துகள், எண்ணெய், கேக், பெட்ரோலிய எண்ணெய், கச்சா பருத்தி, பருத்தி நூல், டயர்கள், ரப்பர், சாயம், ரசாயனங்கள் உள்ளிட்ட 14 பொருட்கள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டன. அதே நேரத்தில், பாகிஸ்தானில் இருந்து மொத்தம் 19 முக்கிய தயாரிப்புகளை இந்தியா இறக்குமதி செய்தது. அதில் முக்கியமாக பழங்கள் இருந்தன. அதேநேரம், பழங்கள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால், பாகிஸ்தான் மண்டிகளில் பழங்களின் குவியல்களாக குவிந்து அழுகிக் கொண்டு உள்ளன. இதனால் பாகிஸ்தான் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்கவில்லை. அந்த வகையிலும் பாகிஸ்தான் தரப்புக்குதான் நஷ்டம் அதிகம் என்கிறார்கள் வர்த்தக துறையில் இருப்போர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+