'உங்களுடன் நாங்க இருக்கிறோம்.. கொரோனா பெருந்தொற்றை ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும்'.. இம்ரான் கான் ட்வீட்
டெல்லி: கொரோனா பரவலின் இரண்டாம் அலைக்கு எதிராகப் போராடும் இந்தியர்களுக்குத் துணையாக இருப்போம் என்றும் மனிதக் குலம் எதிர்கொள்ளும் இந்த சவாலை நாம் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் தற்போது உச்சத்தில் உள்ளது. தினசரி வைரஸ் பாதிப்பு 3.6 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுமட்டுமன்றி வரும் காலங்களில் இந்தியாவில் கொரோனாவின் கோரதாண்டவம் ஆடும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாகத் துணை நிற்போம் எனப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து இம்ரான் கான் தனது ட்விட்டரில், "கொரோனா பரவலின் இந்த அபாயகரமான அலையில் போராடி வரும் இந்திய மக்களுக்கு என்றும் துணையாக இருப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்திய உள்ளிட்ட அனைத்து நாட்டினரும் விரைவில் குணமடைய வேண்டும் எனப் பிரார்த்தனை செய்கிறேன். உலக அளவிலான இந்த சவாலை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும். மனிதக் குலம் எதிர்கொள்ளும் இந்த சவாலை நாம் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும்" என ட்வீட் செய்துள்ளார்,
கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு ஆதரவாக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாகிஸ்தான் மக்கள் சார்பில் அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் மனித இனத்தின் பிரச்சனைகளின் தீர்வுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கை தேவை ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications