அடேங்கப்பா.. சுவிட்சர்லாந்து காதலியை பார்க்க..பாகிஸ்தான் சென்ற ஐடி ஊழியர்..2 ஆண்டுக்கு பின் விடுதலை
டெல்லி: தனது ஆன்லைன் காதலியைச் சந்திக்க 2 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் வழியாக சுவிட்சர்லாந்து செல்ல முயன்றதால் கைது செய்யப்பட்ட, ஹைதராபாத் இன்ஜினீயரை பாகிஸ்தான் தற்போது விடுதலை செய்துள்ளது.
காதலிக்காகக் கடல் தாண்டி செல்லும் நாயகர்களை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி காதலியைத் தேடி எல்லை தாண்டி சென்றதால் கைது செய்யப்பட்டவர் தான் வைந்தம் பிரசாந்த்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்த வைந்தம் பிரசாந்த். 31 வயதாகும் இவர் அங்குள்ள பிரபல நிறுவனத்தில் ஐடி இன்ஜினீயராக இருந்தார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு திடீரென மாயமானார்.

பாகிஸ்தானில் கைது
அதைத் தொடர்ந்து இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். இவருடன் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தரிலா என்பவரும் கைது செய்யப்பட்டனர். முறைகேடாக எல்லை தாண்டி பாகிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டாகப் அந்நாட்டு ராணுவம் தெரிவித்திருந்தது. முதலில் இவர்களை இந்திய நாட்டின் உளவாளிகள் என்றே பாகிஸ்தான் ராணுவம் கருதியது.

சுவிட்சர்லாந்து காதலி
ஆனால், அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் தான் சுவாரஸ்ய தகவல் அந்நாட்டு ராணுவத்திற்குத் தெரியவந்தது. வைந்தம் பிரசாந்த்திற்கு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பெண் ஒருவருடன் ஆன்லைனில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அது அப்படியே காதலாக மாறியுள்ளது. இதனால் தனது காதலியைச் சந்திக்க வாரணம் ஆயிரம் சூர்யாவைப் போல கிளம்பிவிட்டார். ஆனால், என்ன விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாமல் புறப்பட்டு விட்டார்.

பாகிஸ்தான் ராணுவம்
பாகிஸ்தான் ராணுவத்திற்கு முதலில் இவர் கூறிய கதைகள் நம்பும் வகையில் இல்லை. இருப்பினும், வைந்தம் பிரசாந்த் இதையே திரும்பத் திரும்ப கூறி வந்தார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் விசாரணை மேற்கொண்டனர். அதில் வைந்தம் பிரசாந்த் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மை எனத் தெரிந்ததும் ஷாக் ஆகிவிட்டது பாகிஸ்தான் ராணுவம்.

வீடியோ வைரல்
கடந்த 2019இல் வைந்தம் பிரசாந்த்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதில் அவர் நலமாக இருப்பதாகவும் முறையான ஆவணம் இல்லாததால் பாகிஸ்தான் காவலர்களால் கைது செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார்.மேலும், தான் இந்தியாவுக்குத் திரும்பத் தேவையான நடவடிக்கைகளை இந்திய தூதரகம் எடுத்து வருவதாகவும் விரைவில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த வீடியோ அப்போது இணையதளத்தில் வைரலானது.

இந்தியா திரும்பினார்
இதையடுத்து அவரை இந்தியாவுக்கு விரைவாக அழைத்து வரும் பணிகளில் இந்திய தூதரகம் இறங்கியது. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இதில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமலேயே இருந்தது. இந்நிலையில், வைந்தம் பிரசாந்த், இன்று வாகா எல்லையில் இந்தியா ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் அதன் பிறகு ஹைதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டிற்குத் திரும்புவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த அவர், சுவிட்சர்லாந்து பெண்ணை காதலிப்பது உண்மை தான் என்றும் இருப்பினும் அது தனிப்பட்ட விவகாரம் என்றும் தெரிவித்தார்,
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications