அலறும் பாகிஸ்தான்.. மருந்து சப்ளையில் 40% இந்தியா தான்.. கேட்டை மூடுனா கதி கலங்கிப்போகும்!
டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா உடனான வர்த்தகம் நிறுத்தப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ஒரு விஷயத்திற்காக மிரண்டு போயுள்ளது. இந்தியாவில் இருந்து மருந்துகள் வருவது நிறுத்தப்பட்டால் என்னாகும் என்ற அச்சத்தில் அந்நாட்டின் மருந்துத் தேவைகளுக்கான அவசர நடவடிக்கைகளை பாகிஸ்தான் செயல்படுத்தத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கோரத் தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, அட்டாரி - வாகா எல்லை உடனடியாக மூடல், பாகிஸ்தான் மக்களுக்கு இந்திய விசா ரத்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர்கள் வெளியேற்றம் மற்றும் இஸ்லாமாபாத் தூதரகத்தில் உள்ள இந்திய அதிகாரிகளின் எண்ணிக்கைக் குறைப்பு என 5 முக்கிய நடவடிக்கைகளை பாகிஸ்தான் மீது எடுத்துள்ளது இந்தியா.

பயங்கரவாத தாக்குதலின் தீவிரத்தை உணர்ந்து இந்த முக்கிய நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ள நிலையில், பாகிஸ்தான் மீது மேலும் கடுமையான நடவடிக்கைகள் தேவை என்றும் உடனடியாக, பாகிஸ்தானுக்கு மருந்துப் பொருட்களின் விநியோகத்தை இந்தியா நிறுத்த வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.
அலறும் பாகிஸ்தான்
இந்நிலையில், இந்தியாவுடனான வர்த்தக நிறுத்தத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் மருந்துகள் தட்டுப்பாட்டை தவிர்க்க அவசர நடவடிக்கைகளை பாகிஸ்தான் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் மருந்துகளைப் பாதுகாக்க "அவசரகால தயார்நிலை" நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.
மருந்துத் துறையில் இந்தத் தடையின் தாக்கம் குறித்து முறையான அறிவிப்பு எதுவும் இல்லை என்று பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (DRAP) தெரிவித்துள்ளது. ஆனால் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு 2019 நெருக்கடிக்குப் பிறகு அவசரகாலத் திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாக DRAP அதிகாரி ஒருவர் ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
2019க்குப் பிறகு
"2019 நெருக்கடியைத் தொடர்ந்து, இதுபோன்ற சூழல்களுக்கு நாங்கள் தயாராகத் தொடங்கினோம். எங்கள் மருந்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மாற்று வழிகளை நாங்கள் இப்போது தீவிரமாகப் பார்த்து வருகிறோம்" என்று பெயர் குறிப்பிடாத அதிகாரி கூறியதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் தமது மருந்து மூலப்பொருட்களில் 30 முதல் 40 சதவீதம் வரை இந்தியாவை நம்பியுள்ளது. இதில் ஆக்டிவ் பார்மாசூட்டிகல் இங்க்ரீடியண்ட்ஸ் (ஏபிஐ) மற்றும் பல்வேறு மேம்பட்ட சிகிச்சை பொருட்கள் அடங்கும். ஆனால் இந்தியாவுடனான வர்த்தகம் திடீரென நிறுத்தப்பட்டதால், இந்த விநியோகச் சங்கிலி இப்போது சீர்குலைந்துள்ளது. இதனால், பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் DRAP சீனா, ரஷ்யா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிடமிருந்து மாற்று வழிகளைத் தேடுவதாக கூறப்படுகிறது.
முக்கியமான மருந்துகள்
ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகள், பாம்பு விஷக்கடி எதிர்ப்பு, புற்றுநோய் சிகிச்சைகள், மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் மற்றும் பிற முக்கியமான உயிரியல் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதில் பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.
DRAP சில எமர்ஜென்சி ரெடி உறுதிமொழிகளை அளித்த போதிலும், தொழில்துறையினரும் சுகாதார நிபுணர்களும் வரவிருக்கும் சவால் குறித்து எச்சரித்துள்ளனர். வர்த்தக இடைநீக்கத்தின் விளைவுகளை நிர்வகிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அது நாட்டிற்கு ஒரு சிக்கலை உருவாக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியா தான் மெயின்
பாகிஸ்தான் தனது மருந்து மூலப்பொருட்களில் சுமார் 30%-40% இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. மிக முக்கியமாக, புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சைகள், தடுப்பூசிகள் மற்றும் சீரம், குறிப்பாக ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி மற்றும் பாம்பு விஷ எதிர்ப்பு ஆகியவற்றை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம்," என்று தேசிய சுகாதார சேவைகள், ஒழுங்குமுறைகள் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அச்சம்
இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்த போதிலும், மருந்து இறக்குமதியின் நிலையை தெளிவுபடுத்தும் அதிகாரப்பூர்வ உத்தரவு சுகாதார அமைச்சகத்திற்கு இன்னும் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
மருந்து விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இடையூறு கடுமையான பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று அந்நாட்டு சுகாதாரத் துறை அஞ்சுகிறது. மருந்து பற்றாக்குறை அதிகரித்தால் பதிவு செய்யப்படாத மற்றும் அங்கீகரிக்கப்படாத மருந்துகள் ஆப்கானிஸ்தான், ஈரான், துபாய் மற்றும் கிழக்கு எல்லை வழியாக பாகிஸ்தானுக்குள் கடத்தப்படும் ஒரு கறுப்புச் சந்தை மிகப்பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் பாகிஸ்தான் மக்கள் அஞ்சுகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications