மூச் விடமுடியாத பாகிஸ்தான்.. மும்பையில் 172 பேரை உயிரை குடித்த ஹபீஸ் சயீத் மகன் 'சடலம்' கிடைத்தது!
டெல்லி: மும்பை மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி 172 பேரின் உயிரைக் குடித்த பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் மகன் கமாலுதீன் சயீத் சடலமாக மீட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் செயல்படக் கூடிய இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத சதித் தாக்குதல்களை நடத்தும் ஜமாத் உல் தாவா என்ற பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனர் ஹபீஸ் சயீத். லஷ்கர் இ தொய்பா என்ற அமைப்புடன் இணைந்தது இது.

மும்பை தாக்குதலின் மூளை: 2008-ம் ஆண்டு மும்பையை ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்ட பயங்கரவாத தாக்குதலின் மூளையே இந்த ஹபீஸ் சயீத். மும்பை தாக்குதலில் மொத்தம் 172 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தேடப்படுகிற பயங்கரவாதி ஹபீஸ் சயீத். சர்வதேச நாடுகளாலும் கொடூரமான பயங்கரவாதி என பிரகடனம் செய்யப்பட்ட நபர்.
ஹபீஸ் சயீத் மகன் மாயம்: பாகிஸ்தான் நீதிமன்றத்தால் பயங்கரவாத செயல்களுக்காக 31 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவராக சொல்லப்படுகிற ஹபீஸ் சயீத், அந்நாட்டில் சுதந்திரமாக உலவுகிறார் என்பது சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் தகவல். இந்த ஹபீஸ் சயீத் மகன், கமாலுதீன் சயீத் சில நாட்களுக்கு முன்னர் பெஷாவர் நகரில் இருந்து காணாமல் போனார். ஆனால் இது பற்றி பாகிஸ்தான் தரப்பு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறது.

ஹபீஸ் சயீத் மகன் உடல் மீட்பு?: தற்போது பெஷாவரில் கமாலுதீன் சயீத் உடல் மீட்கப்பட்டிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கமாலுதீன் சயீத் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானால் இந்த விவகாரம் குறித்து பகிரங்கமாக எதனையும் தெரிவிக்க முடியாத நெருக்கடியில் சிக்கியிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.
போட்டு தள்ளியது யார்?: கமாலுதீன் சயீத்தை பலுசிஸ்தான் தனிநாடு கோரும் அமைப்புகள் அல்லது சர்வதேச புலனாய்வு அமைப்பின் உளவாளிகள் கொலை செய்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே ஹபீஸ் சயீத்தின் வலது, இடது கரங்கள் மர்ம நபர்களால் வேட்டையாடப்பட்டனர். பின்னர் ஹபீஸ் சயீத் வீடு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது ஹபீஸ் சயீத் மகனின் கதையும் முடிக்கப்பட்டுவிட்டது!
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications