Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா வந்த பாக். பெண் சீமா.. சுதந்திர தினத்தில் என்ன செய்தார்! அப்போ இங்கிருந்த பாக். சென்ற அஞ்சு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுக்க சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில், பாகிஸ்தானில் இருந்து காதலிக்காக இந்தியா வந்த சீமா என்ன செய்தார் என்பது குறித்த படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

எல்லை கடந்த காதல் என்பது முன்பெல்லாம் சும்மா நாம் பேச்சுக்கு சொல்லும் உதாரணமாக மட்டுமே இருந்து வந்தது. ஆனால், சமீப காலமாக இதுபோன்ற எல்லை கடக்க வைக்கும் காதல் சம்பவங்கள் நிஜமாகி வருகிறது.

 Pakistan Woman Seema and Indian woman Anju did what in independence day

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் பப்ஜி மூலம் காதலித்த நபருக்காகப் பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா என்பவர் நேபாளம் வழியாக இந்தியா வந்தார். அதேபோல இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் தனது காதலனுக்காகப் பாகிஸ்தான் சென்றார். அவர்கள் இருவரும் சுதந்திர தினத்தன்று என்ன செய்தார்கள் என்பதைப் பார்க்கலாம்.

பப்ஜி காதல்: பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் என்ற 27 வயதான பெண்ணுக்கு பப்ஜி விளையாடும் போது உத்தரப் பிரதேச நொய்டாவை சேர்ந்த சச்சின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காதலாக மாறவே அவர் கராச்சியில் தனது நிலத்தை விற்று.. நேபாளம் வழியாக இந்தியா வந்தார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் என்பவருடன் வாழ அவர் வந்திருந்தார். இது அப்போது இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. பலரும் அவர் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர். இருப்பினும், அவர் இந்தியாவில் தொடர்ந்து இருந்து வந்தார்.

என்ன செய்தார்: இன்று நாட்டின் 77வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், சீமா என்ன செய்தார் என்பது குறித்த படம் தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அவர் உத்தரப் பிரதேசம் நொய்டாவில் தனது குடும்பத்தினருடன் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.. இது குறித்து ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் "ஹர் கர் திரங்கா" கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த நிகழ்வில் சீமா ஹைதர் மற்றும் சச்சின் மீனா இணைந்து தேசியக் கொடியை ஏற்றினர். மூவர்ணத்தைக் கொண்ட ஆடையை அவர் அணிந்திருந்தார்.. மேலும், ''பாரத் மாதா கி ஜெய்'' மற்றும் ''வந்தே மாதரம்'' என்று முழக்கங்களையும் அவர் எழுப்பி வந்தார்..

அவர் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் பரவிய நிலையில், இது குறித்து செய்தியாளர் கேட்ட போது, பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வந்தது உண்மைதான் என்றும் இருப்பினும், அந்த வாய்ப்பை வேண்டாம் எனச் சொல்லிவிட்டதாகவும் சீமா தெரிவித்தார்.

இந்தியப் பெண் அஞ்சு: சீமாவை போலவே மற்றொருவரும் எல்லை தாண்டியிருந்தார். இந்தியாவைச் சேர்ந்த அஞ்சு என்பவர் பாகிஸ்தான் இளைஞர் ஒருவரைக் காதலிக்கவே அவரும் பாகிஸ்தான் சென்றிருந்தார். ராஜஸ்தானைச் சேர்ந்த அஞ்சு, சுற்றுலா விசாவை பெற்று பாகிஸ்தான் சென்றார். அங்கு அவர் தனது பேஸ்புக் காதலன் நஸ்ருல்லாவுக்காக இஸ்லாம் மதத்திற்கு மாறி ஜூலை 25ஆம் தேதி அவரை திருமணம் செய்துகொண்டார்

இந்த ஜோடி இப்போது கைபர் பக்துன்க்வாவின் அப்பர் டிர் மாவட்டத்தில் வசித்து வருகிறார்கள். 34 வயதான அஞ்சு ஏற்கனவே இந்தியாவில் திருமணமானவர்.. அவருக்கு இங்குள்ள கணவருடன் இன்னும் முறையாக விவாகரத்துக் கூட ஆகவில்லை.. இந்த தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகளும், ஆறு வயதில் ஒரு மகனும் உள்ளனர். அவர்களை விட்டுவிட்டுத் தான் இவர் பாகிஸ்தான் சென்றார்.

என்ன செய்தார்: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி பாகிஸ்தான் சுதந்திர தினத்தைக் கொண்டாடும். இந்த நாளில் அஞ்சு என்ன செய்தார் என்பது குறித்த படங்களும் இணையத்தில் டிராண்டாகி வருகிறது. அதில் அஞ்சு தனது புது கணவர் நஸ்ருல்லாவுடன் சேர்ந்து கேக் வெட்டி இந்த சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்.. பாகிஸ்தான் தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் அவர் கேக் வெட்டி கொண்டாடுகிறார்.

அப்போது பலரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதும் அந்த படத்தில் இருக்கிறது. இந்த இரண்டு காதல் சம்பவங்களிலும் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் இருக்கின்றன.. இணையத்தில் ஏற்பட்ட பழக்கமே இரு தரப்புக்கும் காதலாக மாறியிருக்கிறது.. அதேபோல சீமா மற்றும் அஞ்சு இருவருக்கும் பொதுமக்களிடையே ஒரு பக்கம் ஆதரவும் இருக்கிறது மறுபுறம் எதிர்ப்பும் இருக்கிறது. இது குறித்த படங்கள் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+