RAW உளவுத்துறைக்கு புது தலைவர்.. யார் இந்த பராக் ஜெயின்? ‛ஆபரேஷன் சிந்தூர்' மூளையாச்சே.. செம மூவ்
டெல்லி: ‛ரா' உளவுப்பிரின் அடுத்த செயலாளராக பராக் ஜெயினை நியமனம் செய்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் தான் அடுத்த 2 ஆண்டுகள் ‛ரா' பிரிவின் தலைவராக செயல்பட உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான இந்த ‛பராக் ஜெயின்' யார்? பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
நம் நாட்டின் உளவுத்துறை பிரிவுகளில் மிகவும் முக்கியமானது RAW. இதனை ஆங்கிலத்தில் Research and Analysis Wing (RAW) என்பார்கள். இந்த ‛ரா' பிரிவு உளவுத்துறை சார்பில் நம் நாட்டுக்கு எதிராக வெளிநாடுகள் போடும் திட்டம், நம் நாட்டில் சதிவேலைகளை அரங்கேற்றிவிட்டு வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களின் இருப்பிடம் உள்பட அவர்களின் விவரங்களை நம் நாட்டுக்கு அளித்து வருகிறது.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் வெளிநாடுகளின் சதிகளை கண்டுபிடித்து நம் நாட்டை பாதுகாக்கும் ‛உளவுப்பிரிவாகும்'. இந்த பிரிவின் தலைவராக இப்போது ரவி சின்ஹா இருக்கிறார். ரவி சின்ஹாவின் பதவிக்காலம் நாளை மறுநாள் (ஜூன் 30) முடிவடைய உள்ளது.
இதையடுத்து மத்திய அரசு ‛ரா' பிரிவின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது. முக்கியமான பொறுப்பு என்பதால் யாரை நியமிப்பது என்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி ‛ரா' பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. ‛ரா' பிரிவை எடுத்து கொண்டால் அதன் தலைமை பொறுப்பில் உள்ள பதவி செயலாளர் தான். அந்த வகையில் பராக் ஜெயின் ‛ரா' பிரிவின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஜூலை 1ம் தேதி முதல் அடுத்த 2 ஆண்டுகள் வரை அந்த பொறுப்பில் இருப்பார். பராக் ஜெயின் ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆவார். 1989 ம் ஆண்டு பஞ்சாப் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியாவார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக உளவுத்துறை மற்றும் வெளிநாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டவர்.
இவர் உளவுத்துறையில் ‛Super Sleuth' என அழைக்கப்பட்டு வருகிறது. அதாவது ‛நன்கு துப்பறிபவர்' என்று சொல்வார்கள். சமீபத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை நம் நாடு மேற்கொண்டது. இந்த ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள், விமான தளம், ராணுவ தளம் என்று 12 இடங்கள் அழிக்கப்பட்டன.
இந்த வெற்றிகரமான, ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பராக் ஜெயினும் முக்கிய காரணமாகும். இவர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து வழங்கிய உளவு தகவல்களின் அடிப்படையில் தான் நம் படை வீரர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றனர்.
மேலும் இவர் ஜம்மு காஷ்மீரில் அதிக காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நம் நாட்டில் பயங்கரவாத மிரட்டல்கள் இங்கு தான் அதிகம் என்பதால் இங்கு பராக் ஜெயின் பல ஆண்டு காலம் பணியாற்றினார். ‛ரா' செயலாளாக பொறுப்பு வகிப்பதற்கு முன்பு அவர் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
இவர் 2021 ஜனவரி 1ல் பஞ்சாப் டிஜிபியாக புரோமோஷன் ஆனார். ஆனால் நாட்டின் நலன் கருதி மத்திய அரசு பணிக்கு வந்தார். தற்போது அவருக்கு மத்திய டிஜிபிக்கு சமமான அந்தஸ்து வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications