அதானி மீது குற்றச்சாட்டு.. விவாதத்திற்கு மறுத்த மத்திய அரசு! நாடாளுமன்றம் முடங்கியது
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து அதானி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இன்றும் இந்த கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால், மத்திய அரசு அனுமதி மறுத்ததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளன.
சூரிய மின்சாரம் தயாரிப்பது, அதை விற்பனை செய்யும் வணிகத்தில் உயர் அதிகாரிகளுக்கு ரூ.2000 கோடி வரை அதானி குழுமம் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டை எழுப்பியது. அவருக்கு எதிரான பிடி ஆணையும் பிறப்பித்திருந்தது. ஏற்கெனவே ஹிண்டன்பர்க் விவகாரத்தில் அதானி மீது எழுந்த குற்றச்சாட்டுகள் கொஞ்சம் நஞ்சமல்ல. இப்போது அமெரிக்க நீதிமன்றமும் குற்றம்சாட்டியிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு கண்டென்டாக அமைந்துவிட்டது.

அதானி மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது குறித்து கோரப்படும் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். அதேபோல கூட்டத்தொடர் தொடங்கிய உடன் எதிர்க்கட்சிகள் இந்த கோரிக்கை முன்வைத்து ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தன. ஆனால் மத்திய அரசு அதை ஏற்கவில்லை.
எனவே தொடர்ந்து முழக்கங்களை எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பியிருந்தனர். இதனால் கடந்த 4 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன. இன்றும் இதே கோரிக்கையை எதிர்க்கட்சிகள் எழுப்ப, வழக்கம்போல மத்திய அரசு அனுமதி மறுத்தது. எனவே, எம்பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர். எனவே மக்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாகவும், மாநிலங்களவைநாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் சபாநாயகர்கள் அறிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications