Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாரண்ட் தேவையில்லை.. ராகுலை ஈஸியா கைது செய்யலாம்.. பாஜக எம்பிக்களின் மண்டையை உடைத்த வழக்கின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஜகவின் 2 எம்பிக்களின் மண்டை உடைந்தது. இதுதொடர்பாக பாஜக அளித்த புகாரில் ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராகுல் காந்தியை வாரண்ட் இன்றி கைது செய்ய முடியும். இதனால் ராகுல் காந்தி கைது செய்யப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, ராகுல் கைது செய்யப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் அம்பேத்கர் பற்றி பேசியதாக கூறப்படும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று நேற்று நாடாளுமன்ற நுழைவு வாயிலில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

rahul gandhi congress parliament winter session 2024

அப்போது பாஜக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இதில் பாஜக எம்பிக்கள் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோரின் மண்டை உடைந்தது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். ராகுல் காந்தி தள்ளியதில் தான் அவர்கள் கீழே விழுந்து காயமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பாஜக சார்பில் அனுராக் தாகூர், பன்சூரி சுவராஜ மற்றும் ஹேமங் ஜோஷி ஆகியோர் நாடாளுமன்ற ஸ்ட்ரீட் போலீசில் புகாரளித்தனர். ராகுல் காந்தி மீது பிஎன்எஸ் சட்டம் 109 ( கொலை முயற்சி) உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யும்படி புகாரில் குறிப்பிட்டு இருந்தன. ஆனால் போலீசார் கொலை முயற்சி பிரிவில் வழக்குப்பதிவு செய்யவில்லை.

அதேவேளையில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 115 (வேண்டுமென்றே காயப்படுத்துதல்), 117 (வேண்டுமென்றே தாக்கி காயப்படுத்துதல்), 125 (மற்றவர்களின் உயிர் அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் செய்வது), 131 (குற்றவாளிகளை பயன்படுத்துதல்), 351 (குற்றம்சார்ந்த மிரட்டல்), 3(5) (குற்றம் செய்யும் நோக்கத்துடன் ஒன்றாக கூடுதல்) உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தற்போது ராகுல் காந்திக்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த வழக்கில் ராகுல் காந்தியை வாரண்ட் இன்றி போலீசாரால் கைது செய்ய முடியும்.

இதில் சட்டப்பிரிவு 117 ((வேண்டுமென்றே தாக்கி காயப்படுத்துதல்) குற்றம் நிரூபிக்கப்படும்போது அதிகபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். இல்லாவிட்டால் இரண்டும் செயல்படுத்தப்படும். சட்டப்பிரிவு 115ல் (வேண்டுமென்றே காயப்படுத்துதல்) பிரிவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது 2ம் அமல்படுத்தப்படும்.

சட்டப்பிரிவு 125 (மற்றவர்களின் உயிர் அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் செய்வது) பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது 2ம், 131 (குற்றவாளிகளை பயன்படுத்துதல்) பிரிவுக்கு 3 மாத சிறை அல்லது ரூ.1000 அபராதம் இல்லாவிட்டால் இரண்டும், 351 (குற்றம்சார்ந்த மிரட்டல்) பிரிவு என்றால் 7 ஆண்டு சிறை அல்லது அபராதம் இல்லாவிட்டால் இரண்டும் செயல்படுத்தப்படும்.

மேலும் இந்த வழக்கில் ராகுல் காந்தி கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதா? என்று பார்த்தால் ஆம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் சட்டப்பிரிவு 117 மற்றும் 125 என்பது cognizable offences வகையை சேர்ந்ததாகும். இதற்கு நீதிமன்ற வாரண்ட் இன்றி போலீசாரால் கைது நடவடிக்கை எடுக்க முடியும். non-cognizable offences என்றால் நீதிமன்ற வாரண்ட் கட்டாயம் தேவை. ஆனால் தற்போது ராகுல் காந்தி மீது Cognizable offences பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்ற வாரண்ட் இன்றி அவரை போலீசாரால் கைது செய்ய முடியும்.

இதனால் ராகுல் காந்தி கைது செய்யப்படுவரா? என்றால் அதற்கு வாய்ப்பு என்பது குறைவு தான். ஏனென்றால் வழக்கில் கைது செய்யப்படுவது தொடர்பாக கடந்த 2014ல் ஒரு வழக்கில் சில முக்கிய விஷயங்களை உச்சநீதிமன்றம் கூறியது. அது என்னவென்றால்7 ஆண்டு வரையிலான சிறை தண்டனை தொடர்பான வழக்குகளுக்கு கைது நடவடிக்கை என்பது தேவையில்லை என்பது கூறியுள்ளது. உச்சநீதிமன்ற வழிக்காட்டல் படி பார்த்தால் ராகுலை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் பல சந்தர்ப்பங்களில் போலீசார் இதுபோன்ற வழக்குகளில் கைது நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.

ஒருவேளை ராகுல் காந்தி கைது செய்யப்பட்டாலும் கூட அவர் எளிதாக ஜாமீனில் வர முடியும். ஏனென்றால் அவர் மீது பதிவு செய்யப்பட்ட சட்டப்பிரிவுகள் அனைத்தும் ஜாமீன் கிடைக்கும் வகையில் தான் உள்ளது. இப்போது உங்களுக்கு இன்னொரு சந்தேகம் வரலாம். அதாவது ராகுல் காந்தி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டால் அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கப்படுவாரா? என்ற கேள்வி எழலாம்.

அதற்கு விடை என்னவென்றால் பொதுவாக ஒரு குற்றத்தில் தண்டனை நிரூபிக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டு சிறை தண்டனை உறுதியானால் மட்டுமே எம்பி, எம்எல்ஏவாக இருப்பவர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 பிரிவு 8(3)ன்படி தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். ஆனால் தற்போது ராகுல் காந்தி மீது வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பில்லை. ஒருவேளை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு 7 ஆண்டு தண்டனை அல்லது குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை கிடைக்கும் பட்சத்தில் தகுதி நீக்கம் செய்யப்படலாம். அப்படி தகுதி நீக்கம் செய்யப்படும்பட்சத்தில் அவரால் அடுத்த 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் இது நடக்க சில ஆண்டுகள் வரை எடுக்கும் என்பதால் இப்போதைக்கு தகுதி நீக்கம் பற்றி யோசிக்க வேண்டும்.

முன்னதாக ராகுல் காந்தி தன்மீதான இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛என்ன நடந்தது என்பது உங்களின் (பத்திரிகையாளர்கள்) கேமராக்களில் பதிவாகி உள்ளது. நான் யாருக்கும் பயப்பட வேண்டிய தேவையில்லை. நான் நாடாளுமன்றத்துக்குள் செல்லும்போது என்னை பாஜகவினர் தடுத்தனர். அவர்கள் என்னை தள்ளி மிரட்டினர்'' என்று கூறியுள்ளார். இருப்பினும் பாஜகவினர் அளித்த புகாரில் ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+